• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குணச்சித்திர நடிகர், குரல் கலைஞர் நிழல்கள் ரவி

சினிமா

 நடிகை மனோரமா தன்னுடைய 900 வது படத்தை முடித்த போது ஒரு பேட்டியில் கூறியிருந்தார் கதாநாயகியாக அறிமுகமாகிய அவர் கண்ணதாசனின் அறிவுரையை கேட்டு தான் குணச்சித்திர வேடங்களுக்கு மாறியதாக கூறினார் அதனால் இன்று வரை நீடித்திருக்கிறேன் என்ற போது கூறியிருந்தார் (அதன் பிறகு அவர் 100 படங்கள் நடித்து இருந்தது வேறு விஷயம் )
1980ல் பாரதிராஜா அவர்களின் நிழல்கள் படத்தில் அறிமுகம் ஆகிறார் இருப்பினும் அதன் பின்னர் அவர்கள் கதாநாயக வாய்ப்புகள் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை 
ஓரிரு படங்களில் மட்டுமே இது போல நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார் 

அதனால் சில நாட்களுக்கு முன் வெளியான மார்க் ஆண்டனி படம் வரை நடிக்க முடிந்தது 
அவருக்கு கிடைத்த வேடங்களை சிறப்பாகவே செய்வார் அது கதாநாயகனாகட்டும்  காவல் அதிகாரி ஆகட்டும் ,மருத்துவர் ஆகட்டும், வழக்கறிஞராகட்டும், வில்லனாகட்டும் அல்லது நகைச்சுவை வேடங்களாகட்டும் எல்லாவற்றையும் அவர் சிறப்பாக செய்திருந்தார் 
 ரஜினி படங்களில் அதிகம் வந்திருக்கிறார் ராகவேந்திரா, மாப்பிள்ளை, தர்மதுரை, அண்ணாமலை ,அருணாச்சலம் ஆகிய படங்களில் நடித்திருப்பார்
 கமலுடன் நாயகன், சிங்காரவேலன், குருதிப்புனல் ஆகிய படங்களிலும்
 விஜயுடன் குஷி, திருமலை , காவலன் படங்களிலும் 
அஜித்துடன் ஆசை ,சிட்டிசன், வில்லன்  படங்களிலும் 
சூர்யாவுடன் சிங்கம் ,சிங்கம் 2, காப்பான் 
பிரபுவுடன் சின்னத்தம்பி பெரியதம்பி, மை டியர் மார்த்தாண்டன், சின்ன வாத்தியார் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார் 
தன்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் வேதம் புதிது படத்தில் நடித்திருப்பார்
 குறிப்பிடத்தக்க வேடங்கள் என்றால் நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் நல்ல நாயகனாக வருவார் 
நான் பெத்த மகனே படத்தில் அம்மாவுக்கு பயப்படும் நாயகனாக  நடித்திருப்பார் 
மேலும் மறுபடியும் படத்தில் ஒரு திரை இயக்குநராக வந்து ரேவதியை விட்டுவிட்டு நடிகையான ரோகிணியுடன் செல்வதாக வரும் கதையிலும் அவருக்கு நல்ல கதாபாத்திரம்
இவரது கலை உலக வாழ்க்கை டிவி சீரியல்களிலும் தொடர்கிறது
 தூர்தர்ஷனில் பாலச்சந்தர் இயக்கிய ரயில் சிநேகம் தொடரிலும் அப்பாவுக்காக ,நல்லதொரு வீணை  இவளா என் மனைவி ,டாக்டர் தாரிணி
 சன் டிவியில்  காசளவு நேசம், அலைகள், தென்றல், தீர்க்க சுமங்கலி ரன், சித்தி 2 ,திருமகள் ஆகிய தொடர்களிலும் விஜய் டிவியின்  மருமகள்  தொடரிலும் 
கலைஞர் டிவியில் சூரிய புத்திரி தொடரிலும் வந்துள்ளார்
 மேலும் அமேசான் பிரைம், ஆஹா ஆகிய வற்றின் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்
மிகச்சிறந்த குரல் கலைஞர்  அமிதாப்பச்சனுக்கு குரோர்பதி தமிழில் ஒளிபரப்பான போது குரல் கொடுத்திருந்தார் 
மேலும் மிதுன் சக்கரபூர்த்தி ,நானா படேகர் ,ஜாக்கிசரப் பொம்மன் இராணி ஆகியோருக்கும் தமிழில் குரல் கொடுத்திருந்தார் 
தமிழ் நடிகர்களான ரகுவரன் ,ராஜா ஆகியோருக்கும் குரல் கொடுத்திருக்கிறார் 
இவர் படித்ததெல்லாம் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மனைவியை விஷ்ணு பிரியா ,மகன் ராகுல் ரவி
குணச்சித்திர நடிகர், குரல் கலைஞர், தொலைக்காட்சி தொடர் நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் செயல்பட்டு வரும் இவர் தொடர்ந்து இது போன்று கலைப்பயணத்தை தொடரட்டும்.

 

Vedanthadesikan Mani Lion

Leave a Reply