• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதுரையில் வைரலான விஜய் போஸ்டர்

சினிமா

நடிகர் விஜய் அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். அவர்களை விஜய் மக்கள் இயக்கம் மூலமாக ஒருங்கிணைத்து விரைவில் அரசியல் காட்சியாக மாற்ற இருக்கிறார். அதற்கான பணிகளை தீவிரமாக செய்து வரும் நிலையில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
 
இந்நிலையில் இன்று மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரல் ஆனது. விஜய் 2026ல் முதலமைச்சர் பதவி ஏற்பது போலவும், அதற்கு மோடி வருகை தருகிறார் என நியூஸ் பேப்பர் ஹெட்லைன் வந்திருப்பது போல அந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் விஜய் - பாஜகா உடன் சேர போகிறாரா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தவறான தகவல் பரப்பி விஜய் பெயரை கெடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தில் புஸ்ஸி ஆனந்த் கூறி இருக்கிறார்.

அந்த போஸ்டரில் இருக்கும் நபர் விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரு பதவியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தில் அப்படி ஒரு பதவியே இல்லை என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார். 

Leave a Reply