• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் திரையுலகம் பலரை ஒரு இரவுக்குள் உச்சாணிக்கொம்பில் கொண்டுபோய் வைத்திருக்கிறது இதற்கு பல உதாரணங்கள் உண்டு. 

சினிமா

விக்ரம் 
தமிழ் திரையுலகம் பலரை ஒரு இரவுக்குள் உச்சாணிக்கொம்பில் கொண்டுபோய் வைத்திருக்கிறது இதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதேபோல பலரை   ஒருசில படங்கள் வரை கண்டுகொள்ளாமல் இருந்து பிறகு அவர்களுக்கு பெரிய வாய்ப்புகளை அள்ளி கொடுத்திருக்கிறது. 
ஆனால் அறிமுகமாகி ஒன்பது வருடங்கள் வரை பத்தோடு பதினொன்றாக இருந்து பிறகு கவனிக்கத்தகுந்த முக்கிய இடத்திற்கு ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அது எனக்கு தெரிந்து விக்ரம் மட்டுமே 
1990இவர் தமிழ் திரைக்கு காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி கிட்டதட்ட ஒன்பது வருடங்களில் இருபத்தைந்து படங்கள் நடித்திருந்தாலும்  1999 ம் ஆண்டு வெளிவந்த பாலா இயக்கிய சேது படத்தின் மூலமே இப்படி ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்று அறியப்படுகிறார். 
இடையில் மீரா, புதிய மன்னர்கள் படங்கள் கவனிக்க தகுந்ததாக இருந்தாலுமே அதனால் இவருக்கு பெரிய வாய்ப்புகள் தேடிவந்துவிடவில்லை. காரணம் அந்த வேடங்கள் யாராலும் செய்யமுடியாதவையல்ல. 
ஆனால் சேது  படத்தில் இவர் செய்திருந்த முரடன் மற்றும் மனநலம் பாதித்தவராக வரும் வேடம் காலம் காலமாகபேசக்கூடிய ஒன்றாக அமைந்தது.
 அதன்பின்னர் சிறந்த நடிப்பிற்கு தமிழ் திரையுலகில் அடையாளபடுத்தபடும் சிவாஜி, கமல் ஆகியோருக்கு பிறகு மூன்றாவது இடம் இவருக்கு கிடைத்துவிட்டது இதை மறுப்பவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை 
இடைப்பட்ட காலத்தில் இவர் மலையாளம் , தெலுங்கு படங்களில் கிடைத்த வேடங்களை செய்துவந்தார். அதுமட்டுமல்ல இவர் சிறந்த  டப்பிங் கலைஞராகவும் விளங்கினார்.
காதலன், மின்சாரக்கனவு   படங்களில் பிரபு தேவாவிற்கும், அஜித்தின் முதல்படமான அமராவதி, பாசமலர்கள் படத்திலும் , அப்பாஸிற்கு ஐந்து படங்களுக்கு மேலாகவும் குரல் கொடுத்துள்ளார் . வி ஐ பி  என்ற படத்தில் பிரபு தேவா மற்றும் அப்பாஸ் இருவருக்குமே இவர் குரல் கொடுத்துள்ளார். (இதுபோல வேறுயாரும் ஒரே படத்தில் இருவருக்கு பேசிஇருக்கிறார்களா என்று தெரியவில்லை ) தெலுங்கில் வெங்கடேஷ், போன்றவர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இதில் மிகப்பெரிய கௌரவம் ரிச்சார்ட் அட்டன் பெரோவின் தயாரிப்பான காந்தி படம்   தமிழில் டப் செய்தபோது காந்தியாக நடித்த பென்கிங்ஸ்லிக்கு இவர் குரல் கொடுத்தது ஆகும்.
சேது வெற்றிக்கு பிறகு இவருக்கு தமிழில் தில், காசி, ஜெமினி, சமுராய், கிங் தூள் , காதல்சடுகுடு என்று வரிசையாக படங்கள் வந்தன இதில் ஒரு சில தவிர  பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றதோடு இவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தன 
காசியில் கண்பார்வையற்ற பாடகராக வந்து அசத்தினார். இதில் இவரது கரு விழிகளை காணவே முடியாது. அவ்வளவு தூரம் சிறப்பாக செய்திருப்பார் (மலையாளத்தில் கலாபவன் மணி அதேபோல சிறப்பாக செய்து இருப்பார்)  தில் படத்தில் காவலராக வர கடுமையாக உழைக்கும் ஒரு இளைஞராக வருவார் அதில் இவரது உடலமைப்பு பாத்திரத்திற்கு ஏற்ப இருக்க, கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து சிரமபட்டிருந்தார். 
அதன்பின்னர் சாமி படம் முதன் முறையாக ஒரு பெரிய பேனர் படமாக அமைந்தது. அதில் இவரது விரைப்பான உடலமைப்பு படு பாந்தமாக  இருக்கும் 
பாலாவோடு மீண்டும் பிதாமகன் இதில் வெட்டியானாக வருவார் வசனமே கிடையாது. ஒரு முதன்மை கதாபாத்திரம் பேசாமல் படத்தில் வருவது எனக்கு தெரிந்து இதுவே முதன்முறை. அதில் இவரது நடிப்பு வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கும் 
பிறகு குறிப்பிட்டு சொல்லக்கூடிய வேடம், அந்நியன். மூன்று மனிதனாக ஒருவனே இருப்பது என்ற புதிய பரிமாணம்  அதில் இவர்  நடிப்பு ஒப்புமை படுத்த முடியாத அளவு சிறப்பானது. ஒவ்வொரு வேடத்திற்கும் வெவ்வேறு உடல் மொழி என அசத்தியிருப்பார். 

அதே படத்தில் இவரை பிரகாஷ் ராஜ் சொல்வது போல சிவாஜி, எம்ஜியார் , கமல் , ரஜினி என்ற எல்லோர் நடிப்பிலும் இல்லாத ஒரு சிறப்பு அதில் இருக்கும் 
கந்தசாமி ஒரு வர்த்தக ரீதியான  படம் என்றாலும் கூட இவர் ஒரு சி பி ஐ  அதிகாரியாகவும், சூப்பர் ஹீரோ போன்று பல்வேறு தோற்றத்திலும் வந்து படத்திற்கு பெரிய வலு சேர்த்து இருப்பார் 
இவருக்கு சறுக்கல் கொடுத்த படங்களும் அதிகம்  மஜா, டேவிட், பீமா வும் இருந்தது என்பதையும்  ஒப்பு கொள்ள வேண்டும் 
இயக்குனர்கள் மணிரத்தினம் சங்கர் இருவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும் .அதாவது ஒருவர் பயன்படுத்திய நடிகர்  நடிகைகளை தங்கள் படங்களில் மாறி மாறி இருவரும் பயன்படுத்துவர் 
கமல், ரஜினி, அர்ஜுன், அரவிந்த்சாமி  பிரசாந், விவேக், மதுபாலா,மனிஷா கொய்ராலா, ஐஸ்வரியா ராய், என அந்த பட்டியல் நீளம்.
அதில் இவரும் உண்டு என்றாலும் இவருக்கு மணிரத்தனத்தின்  படத்தில் நடிக்க வந்த முதல் இரண்டு வாய்ப்புகள் தவறின. ( பாம்பே வில்  தாடி எடுக்க வேண்டும் என்ற போதுஇவர் அப்போது நடித்து கொண்டு இருந்த  படங்களின் தொடர்ச்சி பாதிக்கும் என்று மறுத்தார்.  அலைபாயுதே படத்தில் இவரது வேடம் சிறியதாக இருந்ததால் மறுத்தார் ) 
மூன்றாவது முறையாக இவர் பெற்ற வாய்ப்பு ராவன் படத்தில் ஆகும் இது இந்தி மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்டது தமிழில் ஒருவேடம் இந்தியில் எதிர்மறை வேடம். இரண்டிலும் துளியும் ஒற்றுமை வராமல் வேறு ஒரு உடல்மொழியில் செய்திருப்பார். அதுதான் விக்ரம்.
இதன் பிறகு இவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும் ஆனாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருப்பார்.
ஐ  - சங்கரின் படம் தனது வழக்கமான பாணியில் அவர் எடுத்து இருந்தாலும் அதற்கு விக்ரம் கொடுத்தது  அசுர உழைப்பு எனலாம் 
ஆணழகன் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆசையை கொண்ட ஒரு எளிமையான மனிதன் பிரபல மாடல் ஆக, அவனை  அசத்தும் அழகுள்ள ஒரு பெண் மாடல் விரும்ப அதன் பின்னர் நடக்கும் அனைத்தும் விக்ரம் நடிக்க தனது முழுமையான திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்த ஒன்று.
இதில் ஆணழகன், மாடல், பின்னர் நோய் வாய்ப்பட்ட உருவம், கூனன் என்று அனைத்தையும் நூற்றுக்கு  நூறு அர்பணிப்போடு செய்து இருந்தார் இதற்காக தனது எடையை 56 கிலோ வரை குறைத்து மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து இருந்தார் . படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் இவரது உழைப்பு அசாத்தியமானது.
தெய்வ திருமகள் என்ற ஏ எல் விஜய் இயக்கிய படம் சற்று மூளை வளர்ச்சி குன்றியவராக ஒரு பாசமுள்ள தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது குழந்தை நட்சத்திரம் சாரா  இவருக்கு இணையாக நடித்து இருப்பார். காட்சிகள் ஒவ்வொன்றும் ரம்மியமாக அமைந்தது என்றால் அதற்கு இவரின் உழைப்பு ஒரு முக்கிய காரணம். 
இதன் பின்னர் இவருக்கு கதை தேர்வில் குழப்பம் இருந்தது என்று தெரிகிறது அதனால் ராஜபாட்டை, ஸ்கெட்ச் , பத்து என்ன்றதுக்குள்ள போன்றவை சாதரணமான ஒன்றாகி போனது. இருமுகன் ஓரளவு தேறியது கடாரம் கொண்டான் என்று இறுதியாக இவர் நடித்து வெளிவந்த படம் ராஜ்கமல் நிறுவனத்தின்  தயாரிப்பாக இருந்தும் மக்களிடம் சரியாக சென்று சேரவில்லை.
பின்னர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்,
ஆதித்த கரிகாலன் வேடம் இவர் உடல்வாகு ஏற்றதாக இருக்கும் அதில் இவருடைய உடல் மொழியும் சிறப்பானதாகவே இருக்கும் கதையின் மைய கதாபாத்திரம் என்பதால் இரண்டு படங்களிலும் அவர் பேசப்படும் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராயை உருகி உருகி காதலிக்கும் கதாபாத்திரம் அதில் குழைவும் இருக்கும் பின்னர் போரிட என்கின்ற போதும், தன்னை சதி செய்து கொல்ல நினைத்தாள் என்று புரிந்து கொள்ளும் போதும் அவருடைய நடிப்பு பென்ஞ் மார்க் நடிப்பாக இருக்கும்
 கார்த்திக் சுப்பராஜின் மகான்
இவர் மகனுடன் சேர்ந்து நடித்திருந்தார் இவர் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் என்பது போன்று சொதப்பலாக அமைந்த படம் வெகுநாளாக எடுக்கப்பட்டு வரும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் 
சமூக நலனிலும் அக்கறை கொண்டவர் பல அறக்கட்டளையில் பங்குபெற்று சேவைகள் செய்து வருகிறார். மேலும் விளம்பர படங்களில் நடிப்பதிலும் தயக்கம் காட்டாத இவர்  அதன் மூலம் பெறும்ஊதியத்தை சேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்
இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் பங்கெடுத்து உள்ளார், ராதிகாவின் சிறகுகள் டெலி பிலிம் படத்தில் நடித்துள்ளார். 
அறுபதுக்கு உட்பட்ட  எண்ணிக்கையில் மட்டுமே  படங்களில் நடித்திருந்தாலும் இவரது கடுமையான அர்பணிப்பு உழைப்பால், தேசிய விருது உட்பட பலவிருதுகளை பெற்றுள்ளார் பிலிம் பேர் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். இதில் முதல் நிலையில் இருப்பது கமல் அவர் வைத்திருக்கும் விருதுகள் பத்து . அடுத்த நிலையில் விக்ரம் வந்துவிட்டார் என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும் ?
மீனா தயாரித்த ஒரு இசை ஆல்பத்திலும் பாடியுள்ளார் ஏற்கனவே ஜெமினி, மற்றும் கந்த சாமி படத்தில் இவர் பாடலும் பாடியுள்ளார் 
சின்னத்திரை, பெரிய திரை நடிகர், டப்பிங் கலைஞர், பாடகர்,விளம்பர மாடல், சமூக சேவகர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்து அனைத்திலும் சிறந்து விளங்கும் இவர் மென் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும்.

Leave a Reply