• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரற்ற வானிலையால் பொதுமக்கள் பாதிப்பு

இலங்கை

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் ழூழ்கியுள்ளன.

இந்தநிலையில் தெல்தொட்ட பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 வயதான சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளிலும் பல அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைவாக மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பொகவந்தலாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையின் காரணமாக, பொகவந்தலாவ சென்மேரிஸ் தேசிய பாடசாலைக்கு சொந்தமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, வகுப்பறைகளிலும் நீர் நிரம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply