• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே படத்தில் மைக் மோகனுக்கு அடித்த ஜாக்பாட்... 

சினிமா

தளபதி விஜய்யுடன் தளபதி 68 படத்தில் மைக் மோகன் நடிக்கவுள்ள நிலையில் இவரது சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்னும் திரையரங்கில் வெளிவராமல் உள்ள நிலையில், அடுத்த படமான தளபதி 68 படத்திற்கு வெங்கட் பிரபு கூட்டணி தயாராகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார். படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் குறித்த படத்தில் விஜய்க்கு முக்கிய வில்லனாக மைக் மோகன் நடிக்கவுள்ளாராம். 

80களில் கொடிகட்டி பறந்த நடிகர் மட்டுமின்றி, பெண்களின் நாயகனாக இருந்தவர் தான் மைக் மோகன். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தற்போது சினிமாவை விட்டு விலகியுள்ள இவரை விஜய்க்கு வில்லனாக நடிக்க பேசி வருகின்றார்களாம். 100 படத்திற்கு மேல் நடித்த நான் வில்லனாக நடிப்பதா என்று மைக் மோகன் மறுத்துள்ளார்.

ஆனாலும் விடாத படக்குழுவினர் சம்பளத்தை அதிகமாக பேசி அவரிடம் சம்மதம் பெற்றுள்ளனர். இதுவரை இவர் வாங்காத சம்பளத்தை இந்த படத்தில் வாங்க உள்ளார்.

ஆம் குறித்த படத்திற்கு மோகன் வாங்க போகும் சம்பளம் 2 கோடி ரூபாய் ஆகும். இதுவரை சினிமாவில் ஒதுங்கி இருந்த இவருக்கு ரீ எண்ட்டி கொடுப்பதுடன், சம்பளம் ஜாக்பாட் அடித்துள்ளது.

Leave a Reply