• Welcome to TamilsGuide
செய்திகள் 1

104 வயதில் ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி மரணம்

அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து 13,500 அடி உயரத்திலிருந்து டோரத்தி குதித்து சாதனை படைத்தார். இதனையடுத்து, அவர் உலகின் மிகவும் மூத்த ஸ்கை டைவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இந்நிலையில், கின்னஸ் சாதனை படைத்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், மூதாட்டி டோரத்தி உயிரிழந்துள்ளார். டோரத்தி, ப்ரூக்டேல் லேக் வியூ மூத்த வாழ்க்கை சமூகத்தில் அவரது படுக்கையிலே இறந்து கிடந்தார் என்று அவரது நண்பர் ஜோ கானன்ட் கூறினார். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவே இறந்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஸ்கைடைவ் சிகாகோ மற்றும் யுஎஸ் பாராசூட் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், டோரத்தியின் கடைசி டைவ் அவரது 'உற்சாகமான, நன்கு வாழ்ந்த வாழ்க்கையை' பிரதிபலித்துள்ளது. ஸ்கை டைவிங் என்பது நம்மில் பலர் பாதுகாப்பாக நடத்தப்படும் ஒரு செயலாகும். ஆனால், வாழ்நாளின் சிலிர்ப்பைப் பெற இது ஒருபோதும் தாமதமாகாது என்று டோரத்தி நமக்கு நினைவூட்டுகிறார்" என்றார்.

டோரத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்துள்ளார். இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply