• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி அமைச்சர் எச்சரிக்கை

பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். 5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.

இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழியே தாக்குதல் நடத்த கூடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதலை தொடர்ந்து வருகிறோம் என தலைப்பிட்டு உள்ளார். இந்நிலையில், துருக்கியின் தேசிய கல்வி துறையின் துணை மந்திரி நஜிப் இல்மாஸ், நெதன்யாகுவின் டுவிட் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

அதில், ஒரு நாள், உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவார்கள். நீங்களும் மரணம் அடைவீர்கள் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

Leave a Reply