• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு – சஜித் பிரேமதாச பாரிய குற்றச்சாட்டு

இலங்கை

தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

மருந்துப் பொருட்கள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இத்தருணத்தில் தற்போதைய அரசாங்கமும், சுகாதார அமைச்சரும், சுகாதார அமைச்சும் நாட்டுக்கு தரமற்ற மருந்துகளை கடத்துவதில் முதல் புள்ளியாக மாறியுள்ளனர். போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இம்யூனோகுளோபுலின் என்ற அத்தியாவசிய மருந்து வழக்கமான கொள்முதல் முறைகளைப் பின்பற்றாமல் பதிவுமுறை இல்லாது கொண்டு வரப்பட்டுள்ளன

நாட்டு மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் செல்லும் தரக்குறைவான மருந்துகளை வழங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும், சுகாதார அமைச்சரும், சுகாதார அமைச்சும் பொறுப்பு கூற வேண்டும்.

கொள்முதல் மற்றும் பதிவுமுறையற்ற,தரம் குறைந்த ஐ.ஏ.வி.ஐ.என்ற மருந்துப்பொருட்கள் சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இந்நாட்டில் பல நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நேரடியாக நரம்புக்குள் செலுத்தப்படும் ஒரு மருந்து மற்றும் பிரதானமாக நரம்பியல் வலிக்கு பயன்படுத்தப்படுவதோடு, மேலதிகமாக இம்மருந்து மூட்டுகள் மற்றும் இதய நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை தொடர்புடைய வைத்திய நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த தரக்குறைவான மருந்து கொடுக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது இது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் தலைமையிலான அரசாங்கத்தின் பதில் என்னவாக இருக்கிறது. அரசாங்கம் நட்பு வட்டார முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்தி, அரசியல் சூதாட்டங்களை நடத்தி, தேர்தலை நிறுத்தும் அரசியல் மோசடிகளில் ஈடுபட்டு, நாட்டு மக்களை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்த மோசடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும் ஊழல் மிக்க சுகாதார அமைச்சரை இப்போதே ஜனாதிபதியால் நீக்க முடியும். ஜனாதிபதி அதை செய்யமாட்டார். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதியை நிலை நாட்டப்படும்” என கூறியுள்ளார்.

Leave a Reply