• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாயம் குறுந்திரைப்பட வெளியீட்டு விழா

இலங்கை

மலையக மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில், மலையக இளைஞர், யுவதிகளால் தயாரிக்கப்பட்ட ‘சாயம்‘ எனும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு விழா நிகழ்வு நேற்று (08) ஹட்டன் CWF மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ”சாயம் திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் கண்டி மாநகரத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததோடு அதில் சிறப்பாக நடித்த நடிகை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணனினால் பொன்னாடை போர்த்திக்  கௌரவிக்கப்பட்டார்.
 

Leave a Reply