• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' திரைப்படம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து 'லோகேஷுக்கும் நடிகர் விஜய்க்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதனால் தான் லோகேஷ் தன் சமூக வலைதளத்தின் பயோவில் இருந்து 'லியோ' படத்தின் பெயரை நீக்கிவிட்டதாகவும் வதந்தி பரவி வந்தது.

இதனைத் தொடர்ந்து நெட்டிசன் ஒருவர், 'விஜய்க்கும் லோகேஷுக்கும் பிரச்சினை நடந்தது உண்மைதான். எங்களுக்கு எல்லாம் தெரியும்' என பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் போட்டு பின்னர் நீக்கி விட்டார். இதை அந்த நெட்டிசன் ஸ்கீரின் ஷாட் எடுத்து 'லியோ படத்தில் லோகேஷ் மற்றும் விஜய் அவர்கள் இருவருக்கும் நடந்த கசப்பான சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டிய என்னுடைய விளக்கப் பதிவை உண்மை அறிந்த விக்னேஷ் சிவன் அவர்கள் முதலில் லைக் செய்து பின்னர் நீக்கிய காரணம் என்னவோ...' என்று பதிவிட்டிருந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அன்பான விஜய் சார் ரசிகர்களே, லோகி ரசிகர்களே குழப்பத்திற்கு மன்னிக்கவும். மெசேஜையும், அதில் உள்ள தகவலையும் பார்க்காமல் லைக் செய்து விட்டேன். லோகேஷ் கனகராஜின் வீடியோக்களை லைக் செய்யும் பாணியில் லைக் செய்தேன்.

நான் லோகேஷின் மிகப்பெரும் ரசிகன். விஜய் சாரின் பிரமாண்ட ரிலீசான லியோவை எதிர்பார்த்துள்ளேன். நயன்தாராவின் வீடியோக்களுக்கு லைக் போடுவதைப் போன்று லோகேஷ் கனகராஜின் வீடியோவை பார்த்து மெசேஜை பார்க்காமல் லைக் செய்து விட்டேன். தவறு என்னால் ஏற்பட்டது. எனவே உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களைப் போன்று அக்டோபர் 19 ஆம் தேதி 'லியோ' ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply