• Welcome to TamilsGuide
செய்திகள் 1

128 ஆண்டுகளின் பின்னர் அடக்கம் செய்யப்படும் உடலம்

அமெரிக்காவில் ஈமச்சடங்கு நிறுவனத்தில் 128 ஆண்டுகளாகக் காட்சிக்கு வைக்கப்பட்ட ஒருவரது உடல் இன்று (7) அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

கைதியாக இருந்த 'Stoneman Willie' என்று அழைக்கப்படும் ஆடவர் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் 1895ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

Stoneman Willie சிறையில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தைக் அதிகாரிகளல் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து Auman's Funeral Home எனும் ஈமச்சடங்கு நிறுவனம் உடல் மீது பதப்படுத்தும் முறைகளைச் சோதனை செய்தது.

அப்போது கைதியின் உடலும் உடல் தவறுதலாகப் பாடம் செய்யப்பட்டது. இதனையடுத்து உடலை அடக்கம் செய்யாமல் அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கு நிறுவனம் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றது.

இந்நிலையில் பாடம் செய்யப்பட்ட கைதியின் உடலில் முடியும் பற்களும் அப்படியே உள்ளதுடன், அதற்கு ஆடைகளும் அணிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் Stoneman Willie இன்று அடக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது .

Leave a Reply