• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலேஜ்ல பாடகி... ஷூட்டிங்ல டாக்டர்... எல்லாம் கனவு மாதிரி இருக்கு! - சூப்பர் சிங்கர் பிரியங்கா

சினிமா

சின்ன வயசுல இருந்தே இசை கத்துக்கிறேன். எட்டாவது படிக்கும்போது `சூப்பர் சிங்கர் ஜூனியர்’ சீஸன் 2-ல் கலந்துகிட்டேன். இயல்பா அந்த நிகழ்ச்சியில் பாடினேன். `டாப் 6’ போட்டியாளரா இடம் பிடிச்சேன். ஃபைனலுக்குக்கூட போக முடியலையேனு வருத்தப்பட்டேன். மக்கள்கிட்ட அப்போ நான் பெரிசா ரீச் ஆகலை. நான் டாக்டர் ஆகணும்ங்கிறது என் பெற்றோரின் கனவு. அந்த ஆசை எனக்கும் இருந்ததால படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். ப்ளஸ் டூ முடிச்சதும், எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, படிப்பு, இசைத்துறை ரெண்டையும் பேலன்ஸ் பண்ணணும்னு பி.டி.எஸ் படிச்சேன். அந்த டைம்லதான் திடீர்னு பிரபலமானேன். அதுக்குப் பின்னாடி சுவாரஸ்யமான கதை இருக்கு.” - சஸ்பென்ஸுடன் இடைவெளி விடுகிறார்.

ஸ்கூல் படிச்சுட்டு இருக்கும்போது, நேரம் கிடைக்கிறப்போ மட்டும் விஜய் டிவியின் இசை நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டுப் பாடினேன். ப்ளஸ் ஒன் படிக்கிறப்போ, `டி20 20’னு விஜய் டிவி நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். இசை நிகழ்ச்சிகள்ல அதிகம் பாடப்படாத பாடலைப் பாடலாமேன்னுதான், `சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாடலை செலக்ட் பண்ணிப் பாடினேன்.

நடுவர்கள், நண்பர்கள் எல்லோரும் நான் நல்லா பாடினதா பாராட்டினாங்க. இயல்பான விஷயமா அந்தத் தருணம் கடந்துபோச்சு. ஆனா, காலேஜ்ல மூணாவது வருஷம் படிச்சுகிட்டு இருந்தபோது, முன்பு நான் பாடின `சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாட்டு மட்டும் சமூக வலைதளங்கள்ல பலராலும் பகிரப்பட்டு, ரசிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வைரலாச்சு. இது எனக்கே நம்ம முடியாத ஆச்சர்யம்தான்.

அதிர்ந்துகூடப் பேசாத இயல்பு கொண்ட பிரியங்காவுக்கு, நடிப்பு வாய்ப்புகளும் அணி வகுக்கின்றனவாம். இதுகுறித்துப் பேசுபவர், ``இசை வாய்ப்புகளுக்கு இடையே, ஆக்டிங் வாய்ப்புகளும் தொடர்ந்து வருது. என்னோட அமைதியான கேரடக்டருக்கு நடிப்பு செட் ஆகாது. அதில்லாம இசை, படிப்புக்கு இடையே நடிப்புக்கு நேரம் ஒதுக்கிறது சிரமம். விஜய் சேதுபதி சார் பட வாய்ப்பு வந்தும் மறுத்தோம்.

விஜய் சேதுபதி சார் பட வாய்ப்பு வந்தும் மறுத்தோம். அதேபோல, பார்த்திபன் சார், லாரன்ஸ் சார் உட்பட சிலர் என்னை நேரில் அழைச்சுப் பாராட்டியதுடன் நடிக்கவும் கேட்டாங்க. நேரமின்மையால் மறுக்கவே, அதை அன்புடன் ஏத்துக்கிட்டாங்க.

இளையராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், இமான் சார், ஜி.வி.பிரகாஷ் சார் உட்பட பல இசையமைப்பாளர்களுக்கும் பாடியிருக்கேன். நிறைய மேடை நிகழ்ச்சிகளிலும் பாடிட்டேன். 

மலேசியாவுல எஸ்.பி.பி சார்கூட சேர்ந்து பாடியது ஸ்வீட் மெமரி. என்கிட்ட அன்பா பேசி, நிறைய டிப்ஸ் கொடுத்தார். எனக்கான இந்த வாய்ப்புகள் எல்லாத்துக்குமே `சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாட்டுதான் காரணம். அந்தப் பாடலை இதுவரை நூற்றுக்கணக்கான இடங்கள்ல பாடிட்டேன். ஆனாலும், இப்பவரை போற இடங்கள்ல தவறாம பாடச் சொல்வாங்க.

சின்ன வயசுல உரிய அங்கீகாரம் கிடைக்காம வருத்தப்பட்ட நிலையில், சம்பந்தமே இல்லாம திடீர்னு எப்படிப் புகழ் கிடைச்சுதுனு அடிக்கடி யோசிப்பேன். குழப்பமாகி சிரிச்சுட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவேன். திறமைக்கு என்னைக்காவது ஒருநாள் பலன் கிடைக்கும்னு சொல்வாங்கள்ல. அதுக்கு உதாரணமா, என் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றத்தை நினைச்சுப்பேன்.” - மென்மையாகச் சிரிக்கும் பிரியங்கா, பல்வேறு திரைப்படங்களில் 20-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

ஆனந்த விகடன்!

Leave a Reply