• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நோ கிளாமர் கொள்கையுடன் சினிமாவில் தடம் பதித்த நாயகி

சினிமா

நடிகை ரேவதி: 16 வயதில் தொடங்கிய நடிப்பு - 'நோ கிளாமர்' கொள்கையுடன் சினிமாவில் தடம் பதித்த நாயகி

தமிழில் மண்வாசனையுடன் அறிமுகமாகி மக்களின் மனங்களில் மணம் மாற  கதாபாத்திரங்களின் மூலம் இன்றும் நிலைத்து வருபவர் நடிகை ரேவதி. 

ரேவதியின் மூன்றாவது திரைப்படம் ‘கை கொடுக்கும் கை’.

ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் பார்வை மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் ரேவதி. இந்த கதாபாத்திரத்திற்காக படப்பிடிப்புக்கு முன்பாக இரு கண்களையும் கட்டிக் கொண்டு நடந்து பழகியதாகவும், நடிப்பிற்காக முதலும் கடைசியுமாக எடுத்த ஒரே பயிற்சி அதுதான் எனவும் ரேவதி ஒருமுறை குறிப்பிட்டார்.

முதல்நாள் படப்பிடிப்பின்போது, `கண்ணு தெரியாத பொண்ணுதானே. கண் மை உட்பட எந்த மேக்கப்பும் வேண்டாமே’ என இயக்குநர் மகேந்திரனிடம் ரேவதி கூறியிருக்கிறார்.

காதாபாத்திரத்துடன் ஒன்றிப்போன ரேவதியின் அனுகுமுறையை ‘சூப்பர்’ என மகேந்திரன் பாராட்டியிருக்கிறார். அதைத் தொடர்ந்தே அந்த கதாபாத்திரத்தில் மேக்கப்பே இல்லாமல் நடித்திருந்தார் ரேவதி.. 

ரேவதியின் திரை வாழ்க்கையில், திருப்புமுனையாக அமைந்த படம் ‘மௌன ராகம்

மௌன ராகம் படத்தில் ஏற்று நடித்திருந்த திவ்யா கதாபாத்திரம் தனிப்பட்ட முறையில் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்று பலமுறை பதிவு செய்திருக்கிறார் ரேவதி

நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரணுடன் நடித்த ப. பாண்டி, ஜோதிகாவுடன் நடித்த ஜேக்பாட் போன்ற படங்கள் ரேவதியின் வெரைட்டி நடிப்பு திறன் குறையவில்லை என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது

தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரேவதி இதுவரை மூன்று தேசிய விருதுகளை பெற்று கம்பீரமாக வலம் வருகிறார்.

Prashantha Kumar

Leave a Reply