• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1950களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன...

சினிமா

1950களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன...
எம்ஜிஆர் அவர்களுக்கு 
முதன் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் கல்யாணசுந்தரம்.
இவர் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவர்...
தமிழகம் முழுவதும் கணக்கிடும்போது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு மிக அதிக அளவில் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன...

அதற்கு மிக முக்கியமான காரணம் 
1956 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான 
மதுரை வீரன் என்ற படத்தில் எம்ஜிஆர் அவர்கள், தாழ்த்தபடுத்தப்பட்ட சக்கிலியர் எனும் இனத்தைச் சேர்ந்தவராக நடித்திருப்பார்...
அந்த இன மக்கள் வாழ்ந்த பட்டித்தொட்டிகள் அனைத்திலும் 
எம்ஜிஆர் அவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன...
16.01.1958 வியாழக்கிழமை
அன்றைய மதுரை மாவட்டம் 
நத்தம் என்னும் ஊரில் எம்ஜிஆர் அவர்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்காக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு       பிட் நோட்டீசை உங்கள் பார்வைக்காக இங்கே பதிவு செய்கிறேன்...
இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரில் ஒருவர் திரு எஸ் முத்து அவர்கள், மதுரை மாநகர் மன்ற உறுப்பினராக அந்த காலத்தில் இருந்தவர். 
பின்னாளில் மதுரை மாநகர மேயராகவும் பதவியில் இருந்த மதுரை முத்து தான் அவர்...

 

சுகுமாரன் அரியலூர்

Leave a Reply