• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே - திருமணம் குறித்து மனம் திறந்த லட்சுமி 

சினிமா

தமிழ்திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான லட்சுமி 70 களில் பல வெற்றிப்பபடங்களை கொடுத்தவர். தனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளுடன் பிரிந்து சென்றுள்ளார்.

மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர் இன்றும் இளமையாகவும் சுதந்திரமாகவும் செயற்படுவதற்கு என்ன காரணம் ? இது குறித்து அவரே மனம் திறந்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார். இது குறித்து இந்த பதிவில்  பார்க்கலாம். 

 37 வருடமாக அவருடைய கணவன் தான் அவருக்கு புடவை தேர்வு செய்வாராம் தனக்கு தேர்வு செய்யும் விடயங்களைில் பெரிதாக ஆர்வம் இல்லை அவரின் தேர்வு எப்போமும் சிறப்பாக இருக்கும் என்று கணவரை பாராட்டியுள்ளார்.

அழகு என்பது உள்ளிருந்து வர வேண்டும் மேக்அப் செய்துக்கொள்வதனால் மட்டும் அழகு கிடைப்பதில்லை என்றும் தான் இதுரையில் பேஷியல் செய்துக்கொண்டதே இல்லை யாராவது நம்புவீர்களா? என கேள்வி எழுப்பிய இவர் தான் இந்த வயதிலும் இளமையாக இருப்பதற்கு உடற்பயிற்ச்சி, நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்றவை மாத்திரமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இறப்பு அனைவருக்கும் நிச்சயமானது அதுவரையில் வாழ்வதற்கு ஒரு போதும் பயப்பட கூடாது.

நான் இன்று வரை எல்லா படப்பிடிப்புக்கும் தனியாகவே செல்கிறேன் அதற்கு ஒருபோதும் பயந்தது கிடையாது. இளைமை இருக்கும் வரை வேண்டுமானால் உதவி செய்ய மற்றவர்கள் தயாராக இருப்பார்கள் உண்மையில் முதுமையில் உதவி செய்ய யாரும் தயார் இல்லை இந்த உண்மையை சிறுவயதில் இருந்தே கற்றுக்கொள்வது சிறந்தது.

நான் சிறுவயதில் இருந்து சுதந்திரமாக செயற்படவிடவில்லை ஆனால் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரமே உண்மையான சுதந்திரம் நான் சம்பாதிக்க ஆரம்பித்தன் பின்னரே இவ்வளவு சுதந்திரமாக செயற்பட முடிந்தது.

அது வாழ்வில் மிகவும் முக்கியமான விடயம். ஆரோக்கியம் குறித்து எப்போதும் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம் நிற்கும் பொதும் நடக்கும் போதும் உற்காரும் போதும் கூட மெய்நிலைகளை பேணுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. நமக்கே நம்மை பிடிக்க வேண்டும் என்றால் நம்மை எப்போதும் அழகாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

அப்போது தான் நம்மை சார்ந்தவர்களுக்கும் நம்மை பிடிக்கும் இது நமக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே தவிர அதுவே வாழ்க்கை இல்லை எனவே வாழ்கையில் நீங்கள் சாதிக்க விரும்புவதை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் .

இவரின் கருத்துக்கள் இன்றைய சமூதாயத்தில் பல பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக அமைகின்றது.  

Leave a Reply