• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்பெயின் திருவிழாவில் தலைமை நிர்வாக அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்

ஸ்பெயின் திருவிழாவில் காளை ஒன்று தாக்கியதில் படுகாயமடைந்த 61 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார். ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பாரம்பரிய திருவிழாவாக காளைகளை சாலையில் கட்டவிழ்த்துவிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த திருவிழாவின்போது வாலென்சியாவுக்கு அருகில் உள்ள லா போப்லா டி ஃபோர்னல்ஸில் தெருக்களில் Cocinero எனும் காளை சாலையில் பாய்ந்தோடியது.
  
கூட்டத்தினை நோக்கி ஓடிய அந்த காளை இருவரை காற்றில் தூக்கியெறிந்தது. இதில் ஜோஸ் அன்டோனியோ சுபீஸ் (61) என்ற நபர் படுக்காயமடைந்தார்.

வாலென்சியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கல்லீரல், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் ஜோஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் பமேசாவின் தென் அமெரிக்க குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான சுபீஸின் நண்பரான விசெண்டே ஃபோன்டெஸ்டாட் கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஜோஸ் சுபீஸ் தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பமேசாவின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான லனேசா சக ஊழியரின் மரணத்திற்கு இரங்கலை தெரிவித்துள்ளார். 

Leave a Reply