• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரட்டை குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் - விசேட குழு நியமிப்பு

இலங்கை

களுபோவில போதனா வைத்தியசாலையில், பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ – ஹொன்னந்தர பகுதியைச் சேர்ந்த பெண்னொருவர் கடந்த 8 ஆம் திகதி பிரசவத்திற்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 9 ஆம் திகதி இரட்டைக் குழந்தைகளை பிரசவித்திருந்தார்.

இந்த இரட்டைக் குழந்தைகளும் குறைந்த நிறையுடன் பிறந்துள்ளதாக கூறி, குறைமாத குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தன.

இதனையடுத்து, அதில் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

அந்த ஆண் குழந்தையின் உடலில் நுண்ணங்கிகளின் தாக்கம் காரணமாக இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரிகளால் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் மூச்சு திணறல் காரணமாக அந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் இரட்டைக் குழந்தையின் மற்றைய குழந்தையும் உயிரிழந்துள்ளது.

வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனமே குறித்த இரட்டைக் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றஞ்சுமத்தியுள்ள நிலையில். சம்பவம் தொடர்பாக, குறித்த இரட்டைக் குழந்தைகளின் உறவினர்களால் முறைப்பாடொன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கருத்திற் கொண்டு, விசேட விசாரணைகள் முன்னெக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய, விசேட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை இதற்காக நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply