• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்ஸ் சென்றுள்ள ராணி கமீலாவுக்கும் பிரான்ஸ் முதல் பெண்மணிக்கும் போட்டி

சினிமா

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவி கமீலாவும் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார்கள்.

பாரீஸுக்கு அருகிலுள்ள விளையாட்டு மையம் ஒன்றிற்குச் சென்றிருந்த ராணி கமீலாவும், பிரான்ஸ் முதல் பெண்மணியும் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியுமான பிரிஜிட் மேக்ரானும் போட்டி ஒன்றில் பங்கேற்றார்கள்.

போட்டி என்றதும் வேறெதுவும் எண்ணிவிடவேண்டாம். சும்மா, விளையாட்டாக ராணி கமீலா, பிரான்ஸ் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரானுடன் டேபிள் டென்னிஸ் விளையாடினார், அவ்வளவுதான்.

விளையாட்டு துவங்குவதற்கு முன்பே, பிரிஜிட் மேக்ரான், வீடியோ எடுக்காதீர்கள் என செல்லமாக ஊடகவியலாளர்களை மிரட்டினார். அப்புறம் என்ன, பிரிஜிட் மேக்ரான் பந்தை அடிக்க, ராணி கமீலா அடித்த பந்து மறுபக்கம் செல்லாமலே நின்றுவிட, அருகிலிருந்த உதவியாளர்கள் மெதுவாக வேறு விடயத்தைப் பேசி ராணி கமீலாவை அங்கிருந்து காப்பாற்றி அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

Leave a Reply