• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் நிகழ்வு 5 ஆம் நாளாக முன்னெடுப்பு

இலங்கை

தியாக தீபம் திலீபனின்  36வது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவரை நினைவுகூரும்  நிகழ்வானது  ஐந்தாம் நாளாக இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை சிவன் கோவிலடியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரல் நிகழ்வில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் திருகோணமலை வாழ் மக்கள் ஒன்றிணைந்து சுடர் ஏற்றி தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த  செல்வராசா கஜேந்திரன் ”நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று அதனை மறுத்து அண்மையில் எம்மீது  மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதலானது சமூகங்களுக்கு இடையில் இன விரிசலை ஏற்படுத்த இந்த அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒன்று.

அரச இராணுவ ஒத்துழைப்புடன் புலனாய்வுத் துறையினராலே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

தமிழ், முஸ்லிம்களது உரிமைக்காகவே தியாகி திலிபன் அகிம்சை முறையில் போராடினார்.அது பிற்போக்கில் அரசினால் பிரிவினை வாதமாக மாற்றப்பட்ட நிலையில் தற்போதும் இந்த அரசானது குறித்த பிரிவினை வாத அடக்குமுறைக்கு ஏற்றவாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply