• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பளு தூக்கலில் சாதனை படைத்த யாழ்.பல்கலைக்கழக மாணவிகள்

இலங்கை

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான  14 ஆவது  மினி ஒலிம்பிக்  போட்டியில்  யாழ் பல்கலைக்கழக மாணவிகள் பளு தூக்கல் பிரிவில் 8  பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வருடமே  முதன் முதலாக பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியானது  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் 5 தங்கம் , 2 வெள்ளி, 1வெண்கல பதக்கம் என 08 பதக்கங்களை யாழ் மாணவிகள் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை ஆணொருவரும் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply