• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் இந்திய முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை

இலங்கை

`இலங்கையில் இந்திய முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென`  இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நேற்றைய தினம் அலரிமாளிகையில்  இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பில்  வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் மூலோபாயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், தனியார் துறையில் இந்திய முதலீடுகளை ஊக்குவிக்க இந்திய தலைமை நிறைவேற்று அதிகாரிகளின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் பல நிறுவனங்களைக் கொண்ட குழுமத்தின் தலைவர் டி.எஸ். பிரகாஷ், பால் உற்பத்தி மற்றும் சேகரிப்புக்கு விவசாய கூட்டுறவு சங்கங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் வெற்றியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை தனது பால் தொழிலை விரிவுபடுத்த முடியும் எனவும் பிரதமர்  தெரிவித்தார்.

இதேவேளை பல தசாப்தங்களாக இலங்கையில் வர்த்தகம் செய்த அனுபவத்தை மேற்கோள் காட்டிய உறுப்பினர்கள்,  இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்கள், மிகப்பெரிய இந்திய சந்தைக்கான தயாரிப்புகளை தயாரிப்பதற்காக, இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகத்  தெரிவித்தனர்.

1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை இந்திய சங்கம், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் பழமையான மற்றும் மிகப்பெரிய நட்புறவு சங்கங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply