• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை அதிபரின் கேள்விக்கு மம்தா சுவாரஸ்ய பதில்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வழியில் நேற்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்தார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அவரை சந்தித்தார். அப்போது, ரணில் விக்ரமசிங்கே மம்தாவிடம், உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தவாறே பதிலளித்த மம்தா பானர்ஜி, அது மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் எங்களை ஆதரித்தால், நாங்கள் நாளை ஆட்சியில் இருப்போம் என தெரிவித்தார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாய் விமான நிலைய ஓய்வறையில் என்னை சந்தித்தார். கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்தார். பணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். அப்போது, கொல்கத்தாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில் உச்சி மாநாட்டில் பங்கேற்க அவரை அழைத்தேன். இலங்கை வருமாறு எனக்கு அவரும் அழைப்பு விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply