• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அர்த்தமுள்ள மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் நடவடிக்கை அவசியம் - ஐ.நா வலியுறுத்து

இலங்கை

அர்த்தமுள்ள மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுடன் உரிய சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மூலம் நாட்டை மீட்டெடுக்க முடியும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஆகவே மீட்சிக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாகபல இலங்கையர்களின் உரிமைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், வறுமை நிலைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாத வகையில் உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து வலியறுடுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு போர்க்குற்ற விவகாரங்கள், மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள், ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் மூலம் வாக்காளர்களின் கருத்துரிமையை அரசாங்கத்தின் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.

அரசாங்கம் புதிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை முன்மொழிந்துள்ள நிலையில், நிலை மாறுகால நீதிச் செயல்முறையும் வெற்றியடைவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க உண்மையான முயற்சிகளால் அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணைகள் மற்றும் வழக்குகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆயின் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களுக்கு இணங்க, ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தால் நிறுவப்பட்ட பொறுப்புக்கூறல் திட்டத்தின் பணிகள் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
 

Leave a Reply