• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதுபான போத்தல்கள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் - சஜித்  குற்றச்சாட்டு

இலங்கை

போலி மதுபான போத்தல்கள் விடயத்தில் காணப்படும் அரசியல் தலையீடுகள் குறித்து குற்றப்புலனாய்வு சட்டம் ஊடாகவே பரீசீலனை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக கருத்தத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போலி ஸ்டிகர்கள் பதித்த பாதுகாப்பற்ற எத்தனை மதுபான போத்தல்கள் இறைவரி திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் 100 இற்கும் அதிகமான விற்பனை நிலையங்கள் கண்டறியப்பட்டன.

சுமார் ஒரு இலட்சம் போலி ஸ்டிகர்களுடனான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து போலி ஸ்டிகர்களும் பதிக்கப்ட்ட மதுபான போத்தல்கள் ராஜகிரியவில் அமைந்துள்ள பிரதான காரியாலத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம் இந்த போலியான ஸ்டிகர்களை மறைத்து தவறாக அச்சிடப்பட்ட ஸ்டிகர்கள் என காண்பிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த போலியான மதுபான போத்தல்கள் உரிய கணக்கெடுப்பின் பிரகாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையால் இதனை விடுவிக்க முடியும் என இறைவரி திணைக்கள அதிகாரி ஒருவர் கூறுகின்றார்.

வங்குரோத்து அடைந்து அரச வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில் இவ்வாறா செயற்படுவது என்று கேட்க விரும்புகின்றேன்.

இது இறைவரி சட்டம் மூலம் பரீசீலனை செய்யப்பட கூடாது குற்றப்புலனாய்வு சட்டம் ஊடாகவே பரீசீலனை செய்யப்பட வேண்டும்.

இந்த நிறுவன தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த விடயத்தை மூடி மறைக்கும் செயற்பாடுகளில் தற்போது ஈடுப்பட்ட வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply