• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவு

இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவை விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகின்றது.

இதற்கமைய ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறிகொத்தவில் சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இலகுவாக இணையும் வகையில், கட்சியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைதிட்டமும் இடம்பெறவுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி தனது 77ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான பாரிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply