• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காரமான டார்ட்டில்லா சிப்ஸால் பறிபோன இளைஞரின் உயிர்

அமெரிக்காவின் Massachusetts மாகாணத்தில் சமூக ஊடக சவாலை எதிர்கொண்டு காரமான டார்ட்டில்லா சிப்ஸ் சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

Massachusetts மாகாணத்தின் Worcester பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவன் 14 வயதேயான Harris Wolobah என்பவரே சமூக ஊடக சவாலை எதிர்கொண்டு மரணமடைந்துள்ளார்.

அமெரிக்காவில் சமூக ஊடக பக்கத்தில் கவனம் ஈர்த்துவரும் One Chip Challenge-ல் குறித்த இளைஞர் கலந்துகொண்டு, அதே நாளில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2016ல் அறிமுகமான உலகிலேயே அதிக காரமான டார்ட்டில்லா சிப்ஸ் சாப்பிட வேண்டும் என்பதே அந்த சமூக ஊடக சவால். அதிகாரிகள் தெரிவிக்கையில், மாணவன் வோலோபா வெள்ளிக்கிழமை அந்த சிப்ஸை சாப்பிட்டு அன்றைய தினமே இறந்ததாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், மாணவன் இறப்புக்கு அந்த சிப்ஸ் தான் காரணமா என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது. வோலோபாவின் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,

பாடசாலையில் வைத்தே வோலோபா தொடர்புடைய சிப்ஸ் சாப்பிட்டதாகவும் அதன் பிறகு வயிற்று வலியால் துடிக்க, சுகாதார மையம் சென்ற பின்னர் வீட்டுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வோலோபா மயங்கி விழுந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட, அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக கூறுகின்றனர்.

டார்ட்டில்லா சிப்ஸ் நிறுவனம் தங்களது இணைய பக்கத்தில் தெரிவிக்கையில், பரவலாக கவனத்தை ஈர்த்துவரும் சமூக ஊடக சவாலை எதிர்கொள்ளும் மக்கள் சுவாசிப்பதில் சிரமம், மயக்கம் அல்லது நீடித்த குமட்டல் போன்றவற்றை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். 

Leave a Reply