• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் பிரபலமாகி வரும் இணைய சவால் - மருத்துவர்கள் எச்சரிக்கை

Egg Crack Challenge என்ற அந்த இணையச் சவால் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் அது குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். "விளையாட்டுதானே... இதில் என்ன இருக்கிறது?" என்று சிலர் கேட்கலாம். ஆனால் விளையாட்டு என்ற பெயரில் பிள்ளைகளை உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்திவிடக்கூடாது என்று பிள்ளைகளுக்கென பல்வேறு காணொளிகளைத் தயாரிக்கும் Ms Rachel கூறினார்.

பெற்றோர் மீது நம்பிக்கை இருக்கும்போதுதான் பிள்ளைகள் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த நம்பிக்கையைப் பெற்றோர் இழந்துவிடக்கூடாது என்றும் அவர் சொன்னார்.

Egg Crack Challenge ஆல் பிள்ளைகள் சால்மோனெல்லா என்ட்டெரிட்டிடிஸ் (Salmonella Enteritidis) எனும் நச்சுக்கிருமியால் பாதிக்கப்படும் ஆபத்தும் இருப்பதாக மருத்துவர்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.

சமைக்கப்படாத முட்டையில் அந்த நச்சுக்கிருமி இருக்கும் சாத்தியம் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் முட்டையைத் தலையில் உடைக்கும்போது பிள்ளைகளின் முகத்தைப் பார்த்துப் பெற்றோர் பலர் சிரிக்கும் நிலையில் பிள்ளைகளை அதை அவமானமாகக் கருதக்கூடும் என்றும் கூறப்பட்டது.

அதனால் பெற்றோர் மீதான நம்பிக்கையைப் பிள்ளைகள் இழக்க நேரிடலாம் என குழந்தை நல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply