• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரையரங்கில் படம் பார்த்த விஜய்....புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு 

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் தளபதி 68. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவிருக்கிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

அதன்படி நேற்று அந்த தொழில்நுட்பத்தில் விஜய் இருக்கும் புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து தற்போது திரையரங்கில் நடிகர் விஜய் படம் பார்த்து தனது பிடித்த நடிகரை கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நேற்று வெளிவந்த இப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துள்ளார் விஜய். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
 

Leave a Reply