• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வறுமையில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் - பிரதமர் தினேஷ் குணவர்தன

இலங்கை

இலங்கையை இடர் மற்றும் வறுமை நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவும் சர்வதேச குறிகாட்டிகளின் அடிப்படையில் எதிர்கால கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

UNDP வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா (Azusa Kubota) மற்றும் OXFORD பல்கலைக்கழகத்தில் OXFORD வறுமை மற்றும் மானிட அபிவிருத்தி முன்னெடுப்பின் பணிப்பாளர் கலாநிதி சபீனா அல்கீர் ஆகியோர் நேற்று அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனைவை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது சமூக விஞ்ஞானத்துறை பேராசிரியர் சிறி ஹெட்டிகே UNDP, MVI, MPI ஆகியவற்றின் அறிக்கைகளை பிரதமரிடம் கையளித்தார்.

போஷாக்கு, கல்வி, வீட்டுக் கடன் அல்லது இடர் நிலை அபாயம் தொடர்பான சிக்கல்களை உள்ளடக்கிய வகையில் 25,000 குடும்பங்களில் இருந்து தரவுகளை பெற்று, தேசிய அளவிலான கணக்கெடுப்பொன்றின் மூலம் இந்த அறிக்கைக்கான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த பரிமாண வறுமை சுட்டெண் மற்றும் பல பரிமாண இடர் சுட்டெண் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப எதிர்காலத் திட்டங்களை தயாரிக்குமாறு கொள்கை வகுப்பாளர்கள், தனியார்துறை மற்றும் சிவில் சமூகத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

இது இடர்நிலைமைகள் மற்றும் வறுமையில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் என்றும் பிரதமர் கூறினார்.

Leave a Reply