• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலை­யில் எங்­க­ளின் பூபா­ளம்

சினிமா

அப்­போது எனக்கு ஆறு வயது. காலை­யில் எங்­க­ளின் பூபா­ளமே இலங்கை வானொ­லி­யில் வரும் பாடல்­கள்­தான். காலை­யில் ஏழு மணிக்கு `பிறந்­த­நாள் இன்று பிறந்த நாள். நாம் பிள்­ளை­கள் போலே தொல்­லை­கள் எல்­லாம் மறந்த நாள்’ என்று டி.எம்.எஸ். குர­லில் இலங்கை வானொ­லி­யின் திரை­யி­சைப் பாடல்­கள் நிகழ்ச்சி தொடங்­கும்.
‘இன்று பிறந்த நாள் காணும்’, என்று நேயர்­க­ளிட மிருந்து வந்த கடி­தங்­கள் மூல­மாக சில நேயர்­க­ளுக்கு இலங்கை வானொலி அன்­றைய பிறந்த தின வாழ்த்­துக்­க­ளைச் சொல்­லும். இந்த `பிறந்த நாள்’ பாடலை எழு­தி­ய­வர்  கவி­ஞர் வாலி. ‘நாம் மூவர்’ படத்­திற்­காக அவர் எழு­திய பாடல் இது. ஜெய்­சங்­கர், ரவிச்­சந்­தி­ரன், நாகேஷ் மூவ­ரும் கதா­நா­ய­கர்­க­ளாக நடித்து கே. ஆர். பாலன் தயா­ரிப்­பில் வெளி­வந்த படம் இது.
அந்த நாளில் இந்த பாடலை இலங்கை வானொ­லி­யில் கேட்ட பல­ருக்­கும் இது ‘நாம் மூவர்’ படப்­பா­டல் என்­பதே தெரி­யாது. ஏதோ இலங்கை வானொலி தயா­ரித்த பாடல் என்றே தான் நினைத்­தி­ருப்­பார்­கள்.
ஆனால், இந்த பாட­லில் எத்­தனை ஆழ­மான வார்த்­தை­களை கொட்­டி­யி­ருப்­பார் வாலி.
‘உறவு என்ற வானத்­திலே – நாம்
பற­வை­யா­க­லாம்
உள்­ளம் என்ற தோட்­டத்­திலே – நாம்
மலர்­க­ளா­க­லாம்
காதல் என்ற சோலை­யிலே – நாம்
தென்­ற­லா­க­லாம்
கண்­கள் என்ற கோயி­லிலே – நாம்
தெய்­வ­மா­க­லாம்
ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் எல்­லை­கள் நாம்
உள்­ள­தைச் சொல்­லும் கிள்­ளை­கள் நாம்
அறி­மு­கம் என்­பது முன்­னு­ரை­யாக
அனு­ப­வம் என்­பது உள்­ளு­ரை­யாக
ஆனந்­தம் என்­பது முடி­வு­ரை­யாக
ஆண்­ட­வன் எழு­திய காவி­யம் நாம்’
அரு­மை­யான வரி­கள் இது.
எனக்கே இது வாலி எழு­திய பாடல் என்­பது வெகு நாட்­க­ளுக்கு பிற­கு­தான் தெரி­யும்.
ஆனால் வாலி என்ற கவி­ஞர் என் மன­தில் பதிந்­தது இந்த பாடல் மூல­மாக அல்ல.
1964ம் வரு­டம் வெளி வந்து வெள்ளி விழா கண்­டது `கற்­ப­கம்’. கே.எஸ். கோபா­ல­கி­ருஷ்­ணன் எழுதி, இயக்கி தயா­ரித்த இந்­தப் படம் சென்னை வெலிங்­டன் திரை­ய­ரங்­கில் வெளி­யா­னது. இந்த படத்­தில்­தான் கே. ஆர். விஜயா அறி­மு­க­மா­னார்.
இந்த படத்­தில் நான்கு பாடல்­கள். எல்லா பாடல்­களை பி. சுசீலா மட்­டுமே பாடி­யி­ருப்­பார். அனைத்­துப் பாடல்­க­ளை­யும் எழு­தி­ய­வர் வாலி.
இதில் வரும் ` அத்தை மடி மெத்­தை­யடி,  ஆடி விளை­யா­டம்மா, ஆடும் வரை ஆடி­விட்டு அல்லி விழி மூடம்மா.’
இந்த பாடல் வாரத்­துக்கு ஐந்து முறை­யா­வது இலங்கை வானொ­லி­யில் ஒலிக்­கும். அப்­போது சிறு­வர்­க­ளாக இருந்த எங்­கள் மன­தில் இந்த பாடல் பதிந்து போனது.
‘கற்­ப­கம்’ படம் வந்த வரு­டம் 1964. இந்த படத்­தின் வெற்­றி­யால் சென்னை கோடம்­பாக்­கத்­தில் கற்­ப­கம் ஸ்டூடி­யோவை உரு­வாக்­கி­னார் இயக்­கு­நர் கே.எஸ். கோபா­ல­கி­ருஷ்­ணன்.
அடுத்த வரு­டம் 1965ல் ‘எங்க வீட்­டுப் பிள்ளை’ படம் வெளி­யா­னது. இந்த படத்­தில் வந்த நான் ஆணை­யிட்­டால் அது நடந்­து­விட்­டால் இங்கு ஏழை­கள் வேதனை பட­மாட்­டார்.  உயிர் உள்­ள­வரை ஒரு துன்­ப­மில்லை அவர் கண்­ணீர் கட­லிலே விழ­மாட்­டார். அவர் கண்­ணீர் கட­லிலே விழ­மாட்­டார்’ இந்த பாடல் பட்­டித்­தொட்­டி­யெங்­கும் பர­வி­யது.  விஜயா புரொ­டக் ஷன்ஸ் சார்­பாக நாகி ரெட்­டி­யும், சக்­ர­பா­ணி­யும் தயா­ரித்த படம். படத்தை இயக்­கி­ய­வர் சாணக்யா.

படம் வெள்ளி விழா கண்­டது. அப்­போ­து­தான் வாலி என்ற கவி­ஞர் பர­வ­லாக பேசப்­பட ஆரம்­பித்­தார். அது­வ­ரை­யில் எந்த பிர­ப­ல­மான சினிமா பாட­லாக இருந்­தா­லும், அது கண்­ண­தா­சன் பாடல்­தான் என்று மக்­கள் நினைத்­தி­ருந்த காலம் அது.
இந்த கவி­ஞர் வாலிக்கு நான் நெருக்­க­மா­வேன் என்று நான் நினைத்­துக் கூட பார்த்­த­தில்லை. 1981 க்குப்­பி­றகு நான் அவ­ருக்கு அறி­மு­க­மா­னேன். அவர் எளி­தில் எந்த பத்­தி­ரி­கை­யா­ள­ரை­யும் நெருங்க விட­மாட்­டார். குமு­தம் இத­ழுக்­காக அவரை பேட்டி காண ஒரு முறை தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்­டேன். `பேட்­டி­யெல்­லாம் வேண்­டாம். உம்ம பேர் என்ன?’ என்று கேட்­டார். நான் சுதாங்­கன் என்­றேன். பிறகு போன் பண்­ணுங்க பார்க்­க­லாம் என்­றார்.
அப்­போது குமு­தம் பத்­தி­ரி­கை­யில் முழு நேர நிரு­பர்­களே கிடை­யாது. பால்யூ போன்ற பிர­ப­ல­மான நிரு­பர்­கள் கூட பகுதி நேரம்­தான். வாலி, அப்­போது குமு­தம் பத்­தி­ரி­கை­யின் இணை­யா­சி­ரி­ய­ரான ரா. கி. ரங்­க­ரா­ஜ­னுக்கு போன் செய்து என்­னைப் பற்றி விசா­ரித்­தி­ருக்­கி­றார். நான் பிர­பல எழுத்­தா­ளர் பி.ஸ்ரீயின் பேரன் என்று ரா.கி. ரங்­க­ரா­ஜன் சொல்­லி­யி­ருக்­கி­றார்.
`அப்­ப­டி­யா­னால் அந்­தப் பையனை எனக்கு போன் பண்­ணச் சொல்­லுங்க’ என்று வாலி ரா. கி. ரங்­க­ரா­ஜ­னி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றார்.
அப்­போ­தெல்­லாம் என் வீட்­டில் போன் வசதி கிடை­யாது. நான் குமு­தம் பத்­தி­ரி­கைக்கு போன போது இந்த தக­வலை ரங்­க­ரா­ஜன் என்­னி­டம் சொன்­னார்.
நான் வாலியை தொடர்பு கொண்­டேன்.
நான் இன்­னா­ரின் பேரன் என்று எப்­போ­தும் சொல்­லிக்­கொண்­ட­தில்லை. என் சொந்த முயற்­சி­யிலே முன்­னேற வேண்­டும் என்­கிற தன்­மா­னம் எனக்கு அதி­கம் உண்டு.
வாலி­யோடு பேசி­ய­போது, ` ஏம்பா, நீ பி.ஸ்ரீயின் பேரனா ? அதை சொல்­லக் கூடாதா? நாங்­க­ளெல்­லாம்
இன்­னிக்கு கவி­ஞன்னு சொல்­லிட்டு திரி­ய­றோம்னா அது உங்க தாத்தா மாதிரி தமி­ழ­றி­ஞர்­கள் எங்­க­ளுக்கு போட்ட பிச்சை’ என்­றார்.
அப்­போது வாலி மகா­லிங்­க­பு­ரத்­தில் இருந்­தார். ஒரு கறுப்பு கலர் பியட் கார் வைத்­தி­ருந்­தார். காரை அவரே ஓட்­டிக்­கொண்டு போவார். அப்­போ­தி­லி­ருந்து அவ­ருக்­கும் எனக்­கும் பழக்­கம் ஏற்­பட்­டது.
தமிழ் சினிமாவில் 1958-ல் முதன் முதலில் தெலுங்கு இசையமைப்பாளரான கோபாலம் என்பவரின் இசையில், மைசூர் இராஜ பரம்பரையைச் சார்ந்த ஏகாம்பர ராசன் என்பவரின் தயாரிப்பில் உருவான, ‘அழகர்மலைக் கள்வன்‘ என்ற தமிழ் திரைப்படத்தில் திரைப்படப் பாடலாசிரியராக வாலி அறிமுகமானார்.
அவர் எழுதிய முதல் பாடல் ‘நிலவும் தாமரையும் நீயம்மா இந்த உலகம் ஒருநாள் உனதம்மா‘ என்பதாகும். அதைப் பாடியவர் திருமதி பி.சுசீலா அம்மா அவர்கள்.
வாலி­யின் திரைப்­பா­டல்­க­ளை­விட அவரை மக்­க­ளி­டம் கொண்டு போய் சேர்த்து அவ­ரது தனிப்­பா­டல்­கள்­தான். காலை­யில் கோயில்­க­ளில் அவ­ரது பக்­திப் பாடல்­கள் ஒலிக்­கும். அவர் திருச்சி வானொ­லிக்­காக எழுதி டி.எம்.எஸ். பாடிய `கற்­பனை என்­றா­லும் கற்­சிலை என்­றா­லும் கந்­தனே உன்னை மற­வேன்’ என்ற பாட­லும், ‘ஓராறு முக­மும், ஈராறு கர­மும், தீராத வினை தன்­னைத் தீர்க்­கும், துன்­பம் வாராத நிலை­தன்­னைச் சேர்க்­கும்’ என்ற பாடல்­கள் இன்று வரை திகட்­டாத பக்தி பாடல்­கள் சுதாங்கன் அவர்கள் தினமலரில் எழுதியது. .
 

 

Leave a Reply