• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் தம்மிடம் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபையினர் ஊடாக விற்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டப்படவில்லை.

நெல்சந்தைபடுத்தல் சபை உத்தியோக பூர்வமாக விவசாயிகளுக்கு தகவல் வழங்கியும் விவசாயிகள் நெல்லினை சந்தைப்படுத்தல் சபையினரிடம் விற்பனை செய்வதற்கு முன்வரவில்லை.

அந்த வகையில் கிளிநொச்சி மற்றும் கண்டாவளை நெல் களஞ்சியத்தின் ஊடாக நெல் சந்தைப்படுத்தல் சபையினர் வெள்ளை நெல்லினங்களை மட்டுமே ஒரு கிலோவிற்கு 95 ரூபாய் கொடுத்து விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து வருகிறது.

தற்பொழுது சிறுபோக அறுவடை முடிவடையும் நிலையிலை நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், நெல்லிற்கான விலை போதாது என கருதி விவசாயிகள் சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply