• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பாகுபாடு நீக்கப்பட வேண்டும்

இலங்கை

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என நாடாளும்ன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடு இன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றபோது கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டுடிற்கு முன்னர் சுதந்திரமாகவும் சமய கலாச்சார மொழி அடிப்படையில் கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஆனால் தற்போது இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களினால் பின்தள்ளப்பட்டவர்களாக வழிநடத்தப்பட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு, மலையகத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒற்றுமையின்மை காரணமாகவே இவ்வாறு பின்தள்ளப்பட்டுள்ளதாக நாடாளும்ன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில் வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் என பிரிவு ஏற்பட்டுள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply