• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாத்தளை, ரத்வத்த குடியிருப்புகள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

இலங்கை

மாத்தளை, எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து உடைத்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வீடமைக்க தோட்ட மக்களுக்கு காணிகளை வழங்கு, ரத்வத்த தோட்ட நிர்வாகத்தின் செயலை வண்மையாக கண்டிக்கின்றோம் என்ற தொனிப்பொருளின் கீழ், பிரதேச மக்களினால் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ரத்வத்தை தோட்ட கீழ்பிரிவுக்குட்பட்ட பகுதியில், குறித்த குடியிருப்பில் இருந்த மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்துள்ள நிலையில் தோட்ட நிர்வாகத்தின் முன்னாள் முகாமையாளரினால் இடம் வழங்கப்பட்டிருந்தாக பாதிக்கபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே தற்காலிக குடியிருப்பொன்றை அமைந்துள்ளதாகவும் அவரகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவ்வாறு அமைக்கப்பட்ட குடியிருப்பை உடனடியாக அகற்றுமாறு தொடர்ந்து தோட்ட உதவி முகாமையாளரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் எமது ஆதவன் செய்திப்பிரிவுக்கு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வினவுவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எமது ஆதவன் செய்தி பிரிவு தொடர்புக் கொண்ட போதிலும் முறையான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்து விடயத்திற்கு  நாடாளுமன்ற  உறுப்பினர்  வடிவேல் சுரேஸ்  மற்றும் தழிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன்  ஆகியோர்  கண்டனம்  வெளியிட்டுள்ளதுடன்  சம்பந்தப்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply