• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனர்கள் சுற்றுலா செல்ல அங்கீகரிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் கனடா இல்லை - அதிரவைக்கும் ஒரு தகவல்

கனேடிய உள்விவகாரங்களில் தலையீடு, கனடாவில் வாழும் சீனாவில் பிறந்த மக்கள் துன்புறுத்தல், சிறுபான்மையினத்தவரைக் குறிவைத்தல் மற்றும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களுக்காக சீனா மீது தூதரக ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.

ஆனால், சீனா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் காரணமாக, தற்போது கனடாவின் பொருளாதாரத்தையே பாதிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது சீனா.

உலக நாடுகள் பல, ஓரணியிலிருந்தாலும் சரி, எதிரெதிரணியிலிருந்தாலும் சரி, குறைந்தபட்சம் சில விடயங்களுக்காகவாது மற்ற நாடுகளை சார்ந்துள்ளன. உதாரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகள் காய்ச்சல் மருந்துக்காக சீனா, இந்தியா போன்ற நாடுகளை சார்ந்துள்ளன.

மேலும் பல நாடுகளின் முக்கிய வருவாய், சுற்றுலா மூலம் நிகழ்கிறது. கனடாவைப் பொருத்தவரையில், 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, கனடாவுக்கு சுற்றுலா வந்த சீன சுற்றுலாப்பயணிகள் மூலம்தான் கனடாவுக்கு பெருமளவு வருவாய் கிடைத்துள்ளது.

சீன சுற்றுலாப்பயணிகள், 2019ஆம் ஆண்டில் மட்டும், 255 பில்லியன் டொலர்களை சுற்றுலாவுக்காக செலவிட்டுள்ளார்கள்.

சீனா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் காரணமாக, தற்போது கனடாவின் பொருளாதாரத்தையே பாதிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது சீனா.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சீனர்கள் குழுக்களாக சுற்றுலா செல்ல அங்கீகரிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் 78 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய ஊடகங்கள் சில, இது குறித்து சீனாவிடம் விசாரித்தபோது, கனடா சமீப காலமாக சீனத் தலையீடு என்பது போன்ற விடயங்கள் குறித்து மீண்டும் மீண்டும் அதிக அளவில் பேசி வருகிறது,

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் சீனக் குடிமக்களின் பாதுகாப்பும் சட்டப்பூர்வ உரிமைகளும் உறுதி செய்யப்படுவது சீனாவுக்கு மிகவும் முக்கியமாகும். தன் குடிமக்கள் பாதுகாப்பான மற்றும் வரவேற்கும் சூழலில் பயணிப்பதையே சீனா விரும்புகிறது என்று கனடாவிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply