• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா கவிஞர் கண்ணதாசனை முதல் முறை சந்தித்த அனுபவம் …..

சினிமா

“நான் ஜி.கே வெங்கடேஷிடம் பணியாற்றி கொண்டிருந்த போது முதன் முதலாக கவிஞரை சந்திதேன்.ஜி.கே.வி கன்னடத்தில் இசை அமைத்த ஒரு மெட்டை தமிழில் இசை அமைக்க தீர்மானித்து,பாடலை எழுத கண்ணதாசனை அழைத்தார். கன்னடத்தில் அந்த பாடல் எழுதிய் பாடலாசிரியருக்கு ஒரு வாரம் பிடித்தது,ஓரளவு கடினமான மெட்டுதான்.
கண்ணதாசன் வந்தார், நான் கிடார் வைத்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறேன்.டைரக்டர் சூழலை சொல்ல சொல்ல கவிஞர் கவனிக்கவே இல்லை..புகை பிடிக்கிறார், பிடிக்கிறார் பிடித்து கொண்டே இருக்கார் .. எனக்கோ எரிச்சல் வந்தது..டைரக்டர் சொல்லி முடிச்சதும், ஜி.கே.வெங்கடேஷை பார்த்து, சரி டியுன் என்ன என்றார்..
ஜி.கே.வி: தானானனே நா நா.. டியுன் கேப் விடாம போய்டே இருந்தது..இன்னோரு வாட்டி கேட்டு கொண்டார்
தானானனே நா நா

தேன் சிந்துதே வானம்
அப்புறம் என்ன ?
தனா தனா தானானனா
உனை எனை தாலாட்டுதே
இப்படியே தொடர்ச்சி இல்லாமல்..
மேகங்களே
தரும் ராகங்களே
என்று கூறி கொண்டே இருந்தார்.. கடைசியா எல்லா வரிகளையும் ஒன்று சேர்த்து பாடி பார்த்தால்..அந்த மெட்டுக்கு அந்த பாடல் அவ்வளவு அற்புதமாக பொருந்தியது..
மெய் சிலிர்த்து போனேன் …”

Paravasam Nayagan
 

Leave a Reply