• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராஜநாகத்தை முத்தமிட்டு வீடியோ எடுத்த வன ஆர்வலர்

பாம்புகள் குறித்த வீடியோக்களை ரசிப்பதற்கு என்று சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனால் பகிரப்படும் வீடியோக்களில் சில அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மைக்ஹோல்ஸ்டன் என்ற வன ஆர்வலர் கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தின் தலையில் முத்தமிடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஹோல்ஸ்டன் பாம்பை முத்தமிட மெதுவாக செல்வதும், பின்னர் அதன் தலையில் முத்தமிடும் காட்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோ 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒரு பயனர், நீங்கள் எனக்கு ஒரு மில்லியன் கொடுத்தால் கூட நான் இதை செய்ய மாட்டேன் எனவும், மற்றொரு பயனர், கிங்காக்டெட் என்றும் பதிவிட்டுள்ளார். இதை போல ஒரு பயனர், இது பைத்தியக்காரத்தனமாக தெரிகிறது. ஏன் இதை செய்கிறீர்கள் என விமர்சித்துள்ளார்.

Leave a Reply