• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனைவியுடன் ஹவாய் தீவு செல்கிறார் ஜோ பைடன் - தீ விபத்து சேதம் குறித்து ஆய்வு

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய். இந்த தீவில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், காற்று வேகமாக வீசியதால் காட்டுத்தீ கட்டுக்குள் வராமல் நகரக்குள் பரவியது. இதனால் 90-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்த காட்டுத்தீயால் மவுய் தீவு கடும் சேதம் அடைந்துள்ளது. ஒரு நகரமே தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நானும் எனது மனைவியும் (ஜில் பைடன்) ஹவாய் செல்ல இருக்கிறோம். அங்கு செல்லும் நாங்கள் மவுய் காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அங்கு செல்ல இருக்கும் ஜோ பைடன் எங்களால் மீட்புப்பணி, சுத்தப்படுத்தும் பணிக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஹவாய் தீவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என கவர்னர் ஜோஷ் கிரீனிடம் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்த ஜோ பைடன், ஹவாய் மக்களுக்கு தேவைப்படும் ஒவ்வொன்றும், அவர்களுக்கு சென்றடையும் என்றார். ஜோ பைடன் சூறாவளி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். ஆனால், ஒஹியோவில் ரெயில் கவிழ்ந்து நச்சு ரசாயனம் வெளியேறியது. அந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை. மவுய் தீவில் காட்டுத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் இன்னும முழுயாக கண்டறியவில்லை. விசாரணை நடத்தி வருகிறார்கள். பழமையான லஹைனாவில் ஏற்பட்ட தீ 85 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply