• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் செய்துள்ள முறைப்பாடு

கனடா

கனடாவின் பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த தொழிலதிபர் வயது குறைந்த சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாலியல் சேவைக்காக பணம்...பரிசு பொருட்கள்

பிரபல நிறுவனமான பியூச்சர் எலக்ட்ரானிக்ஸ் என்னும் நிறுவனத்தின் பிரதான மீது இவ்வாறு பிரதானியான ராபர்ட் மில்லர் என்பவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது.

 சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இந்த தொழிலதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களிடம் பாலியல் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 28 பெண்களுக்கு மேலதிகமாக சிலர் மில்லர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

1992 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு பெண்களைக் பாலியல் சேவைக்காக பணம் அல்லது பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த குற்றச்செயலுடன் தொடர்பு பட்டதாகவே ராபர்ட் மில்லர் என்னும் தொழிலதிபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1000 முதல் 2000, 3000 டாலர்கள் வரையில் குறித்த தொழிலதிபர் கொடுப்பனவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை சிறுமிகளை பாலியல் ரீதியாக சேவையில் ஈடுபடுத்தி பணம் வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ராபர்ட் மில்லர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Reply