• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாரிசு, துணிவு மொத்த வசூல் சாதனையை 4 நாட்களில் முறியடித்த ஜெயிலர்.. 

சினிமா

ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

முதல் நாளில் இருந்து சிறந்த வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வெளிவந்து நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் இந்த ஆண்டு வெளிவந்த விஜய்யின் வாரிசு ரூ. 290 கோடி வசூலை சாதனையையும், அஜித்தின் துணிவு ரூ. 210 கோடி வசூல் சாதனையையும் ரஜினியின் ஜெயிலர் அசால்டாக முறியடித்துள்ளது.

இதனால் மீண்டும் நான்தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 

Leave a Reply