• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் திரைக்கு வரவேண்டும்

சினிமா

சுரேஷ் கிருஷ்ணா 
இயக்குனர் பாலசந்தர் இடம் உதவி இயக்குனராக தண்ணீர் தண்ணீர் அச்சமில்லை அச்சசமில்லை படங்களில் பணியாற்றினார். 
பின்னர் 1988இல் முதல்படமான  சத்யாவை கமலை கொண்டு இயக்கினார். அந்த காலத்தில் மாணவர்கள் எப்படி தங்களது வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக அரசியல்வாதிகளால் சீரழிக்கபடுகிறார்கள் என்று காட்டி இருப்பார். நகைச்சுவையும் இருக்கும் அதே போல யதார்த்தமும் இருக்கும். வறுமையின் நிறம் சிகப்பின்  அடுத்த வெர்ஷனாக விளங்கும் கதை. 
தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்கள் அதிகம் இயக்கியுள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மொழிகளை கையாளுவதில் சிக்கல் இருக்கவில்லை 
பிறகு தமிழில் ராஜா கையவச்சா வில் பிரபுவை இயக்கி இருந்தார். இதிலும் வேலைற்ற சுதந்திரமான இளைஞன் எப்படி ஒரு பெயரிய நிறுவனத்தை தலைமை தாங்கி நடத்தும் அளவு செல்கிறான் என்று கதையை நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பார். பிரபுவுக்கு நகைச்சுவை வரும் என்பதை நிருபித்த படம் என்று சொல்லலாம். 
பிறகு ரோஜாவை கிள்ளாதே அர்ஜுன் மற்றும் குஷ்பு இணையில் வந்தது. 
அதன் பின்னர்தான் இவருக்கு ரஜினியை இயக்கும்வாய்ப்பு தனது குரு நாதர் பாலச்சந்திர் மூலம் கிடைத்தது. அண்ணாமலைதான் அந்த படம் 
மிகவும் ஜனரஞ்சகம் மற்றும் குடும்ப செண்டிமென்ட் படம். ரஜினி பால்காரராக சைக்கிளில் வந்து பால் ஊற்றுவார்.இதனால் சைக்கிள்கள் அண்ணாமலை சைக்கிள் என்ற பெயரில் விற்பனை ஆயின.ரஜினி மற்றும் குஷ்புவிற்கு நல்ல புகழை பெற்றுதந்த படம். இசை தேவா ஜனரஞ்சக பாடல்கள். 
பின்னர் வேடன்   சாராசரி படம் 
வீரா  இரு பெண்டாட்டி க்கதை நகைச்சுவை இருந்தது, கலகலப்பு இருந்தது . ஆனால் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாத அளவுதான் இருந்தது . இத்துணைக்கும் அன்று உச்சத்தில் இருந்த மீனா, ரோஜா என இரு கதாநாயகிகள் 
அதன் பின்னர் பாஷா படம் இயக்க வாய்ப்பு  இது எடுக்கும்போது இவருடைய மாஸ்டர் பீஸ் ஆக அமையும் என்று இவருக்கும் தெரிந்து இருக்காது. அந்த அளவு மாஸ் படத்திற்கு கிடைத்தது 
ரஜினியின் நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட், நட்பிற்காக உயிரை கொடுப்பது, தாதாயிசம், பொறுப்புள்ள அண்ணனாக, தம்பி தங்கைகளை கரை சேர்ப்பது . வில்லனின் மகனையே காதலிப்பது என்ற ரஜினியின் பல்வேறு பரிமாணங்களை நன்கு வெளிப்படுத்திய படம். ஜனரஞ்சக படம் என்ற போதிலும் அதை விரும்பாதவர்கள் கூட விரும்பி பார்த்த படம் என்று சொல்லலாம். 
சத்தியராஜ், பிரபு நடித்த சிவசக்தி ஓரளவு ஓடியது . 

அதன் பின்னர் மேற்சொன்ன படங்களின் பாதிப்பு எதுவுமில்லாத கலகலப்பான குடும்பத்தை வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கலந்து அளித்த படம்.ஆஹா. இதில் ரகுவரன், பானுபிரியா தவிர ஸ்டார் நடிகர்கள் யாரும் இல்லை எனினும் படம் ஆகா ஓஹோ என்று  கிரேசி மோகனின்  நகைச்சுவை வசனங்களுக்காக ஓடியது. தெலுங்கில் எடுத்து அதுவும் வெற்றி. 
ஒருவன் -  வளர்த்த குழந்தையை பிரிய முடியாத தந்தை பாசத்தை பற்றிய கதை. சரத்குமார், ரகுவரன் நடித்து சுமார் ரகம்தான் 
சங்கமம் என்ற படத்தை ரகுமான், விந்தியா , மணிவண்ணன் வைத்து இயக்கி இருந்தார் . இது இவர் இயக்கமா? என்று ஆச்சர்ய படும் வகையில் இசை சம்பந்தப்பட்ட படம் பெரிய அளவில் பேசப்பட்டது . ரகுமானின் இசையில் பாடல்கள் ஒளிப்பதிவு எல்லாமே சூப்பர் ஆனால் படம் பெரிய வெற்றியடியவில்லை காரணமும் தெரியவில்லை 
பின்னர் ஆளவந்தான்  கமல் திரைக்கதை எழுதி இரட்டை வேடம் செய்திருந்தார் கடவுள் பாதி மிருகம் பாதி என்ற பாடல் மிகவும் பிரபலம். மனவளர்ச்சி இல்லாத வேடமும் அவருடைய சகோதரர் வேடமும் ஏற்று நடித்திருந்தார் கமல். அவருடைய பங்களிப்பு சிறப்பாக இருப்பினும் இதில் க்ராபிக்ஸ் பண்ணவேண்டும் என்று கமல் அடம் பிடிக்க தயாரிப்பாளர் தாணுவிற்கு அதில் உடன்பாடு இல்லாமல் ( அதிக செலவு பிடிக்கும் என்பதால் ) சச்சரவு ஏற்பட்டது. படமும் சரியாக போகவில்லை. இதற்கு சுரேஷ் கிருஷ்ணா காரணம் இல்லாவிட்டாலும் அவருடைய உழைப்பும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராது வீணானது . 
பின்னர் பாபா   மாறுபட்ட திரைக்கதையால்  படம் வழக்கமான ரஜினி படம் பெறும் வரவேற்பை பெறவில்லை. வெகுநாள் கழித்து அவருக்கு ஒரு தோல்வியை கொடுத்தது . இதில் இயக்குனருக்கும் பெரிய வருத்தம்தான் . 
அதன் பிறகு  நிறைய தெலுங்கு படங்கள் செய்தார் அதே பாதிப்பில் கஜேந்திரன் விஜயகாந்தை வைத்து செய்தார் . மொழி மட்டும் தமிழ் மற்றபடி தெலுங்கு படம் பார்க்கும் உணர்வே இருக்கும் 
பின்னர் ஸ்ரீகாந்தை வைத்து  ஆறுமுகம், தனுசை வைத்து பரட்டை என்ற அழகு சுந்தரம் ( அம்மா செண்டிமெண்ட் ) படங்கள் வந்தன. 
பின்னர் கவிஞர் பா விஜயை வைத்து இளைஞன் என்ற படம் வந்தது. கலைஞர் கருணாநிதியின் வசனம் கதை மக்சிம் கார்க்கியின் தாய் என்ற ருஷ்ய  புதினத்தை வைத்து எழுதியது நடிக்க புதியவர் என்பதால் பா விஜய் அவர் திணறியது நன்கு திரையில் தெரியும். மேலும் பல காரணங்களால் படம் வெற்றி அடையவில்லை
அதன் பின்னர் பத்துவருடமாக தமிழ் திரை பக்கம் வரவில்லை அதுமட்டுமல்ல  பலவருடங்களாக எந்த படமும் இயக்கவில்லை 
இருப்பினும்  ஜனரஞ்சக படம் , இசை சம்பந்தப்பட்ட படம், தாதாயிச படம், குடும்ப செண்டிமெண்ட் படம் , முழு நீள நகைச்சுவை படம் வேலைவாய்ப்பு திண்டாட்டம், வழிதவறிய இளைஞர்களை பற்றிய படம் என பல்வேறு தளங்களில் தன்னால் பயணிக்கமுடியம் என்று நிருபித்துள்ளார் 
அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ( மலையாளம் தவிர்த்து . அதுதான் அவரது தாய் மொழி ) ஹிந்தியிலும் படம் செய்தவர் இவரது சகோதரிதான் சாந்தி கிருஷ்ணா (பன்னீர் புஷ்பங்கள் கதாநாயகி)
திறமையாளர் . மீண்டும் திரைக்கு வரவேண்டும்.

Vedanthadesikan Mani Lion

Leave a Reply