• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது நடிப்பால் திரைப்பட ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். 

சினிமா

சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது நடிப்பால் திரைப்பட ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். பிராந்திய அளவில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் மோகன்லால் அனைவராலும் அறியப்பட்டவர் .

1980களின் பிற்பகுதியில், மோலிவுட்டின் புதிய நடிகர் மோகன்லால். நடிகர் தனது அற்புதமான நடிப்பால் திரைப்பட ஆர்வலர்களின் இதயங்களை வென்று கொண்டிருக்கிறார் .

சுசித்ரா தனது கல்லூரி நாட்களில், இளைஞர்களின் இதயத் துடிப்பாக இருந்த “மோகன்லாலை” மானசீகமாக ரசிகையாக காதலித்து இருக்கிறார் . அவர் தன் அபிமான நடிகருக்கு அடிக்கடி பூங்கொத்துகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை அனுப்பவதுமாக இருந்திருக்கிறார் .

சுசித்ராவும் பெரிய திரை குடும்பத்தை சேர்ந்தவர்தான் .நமது தமிழ் பட நடிகர் மற்றும் பிரபல தயாரிப்பாளர் கே பாலாஜியின் மகள். சுசித்ராவுக்கு சுஜாதா என்ற சகோதரியும், சுரேஷ் பாலாஜி என்ற சகோதரரும் உள்ளனர். பாலாஜியின் தயாரிப்பு நிறுவனமான சுஜாதா சினி ஆர்ட்ஸ், அவரது மூத்த மகள் சுஜாதாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது

இந்த சமயத்தில்தான் சுசித்ராவின் குடும்பத்தினரிடம் இருந்து மோகன்லாலுக்கு சம்மந்தம் வந்தது. ஆனால் மோகன்லால் மற்றும் சுசித்ரா இருவரின் ஜாதகம் பொருந்தாத நிலையில் திருமண பேச்சு நின்று விட்டது .

சுசித்ரா சென்னையில் தனது வாழ்க்கைக்குத் திரும்ப மோகன்லால் நடிகராக கேரளா திரும்பினார். ஆண்டு கழிந்ததும் இந்த முறை மோகன்லால் கோழிக்கோடு வந்தபோது, மீண்டும் சுசித்ராவின் ஜாதகம் இவருக்கு வந்தது . இவர்களது ஜாதகத்தை பார்க்கும் போது முதன்முதலில் கணித்த ஜோதிடர் செய்த தவறு தெரிய வந்தது .அதனால் ஏற்பட்ட குழப்பம் என்பதை இரு குடும்பத்தாரும் உணர்ந்தனர் .

மோகன்லால் தமிழ்நாட்டு மாப்பிளை ஆவது உறுதி என்பது அப்போதே நிர்ணயிக்கப்பட்டு விட்டது போல .

மோகன்லால் 28 ஏப்ரல் 1988 இல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே. பாலாஜியின் மகள் சுசித்ராவை மணந்தார். சுசித்ராவுக்கும் மோகன்லாலுக்கும் கேரளாவில் உள்ள ஆற்றுக்கால் பகவதி கோயிலில் திருமணம் நடந்தது.

திருமணத்தில் திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டதால் நட்சத்திரங்கள் குவிந்த ஓர் திருமணமாக ஆகிப்போனது . பிரேம் நசீர், கேபி உம்மர், திக்குரிச்சி சுகுமாரன், மம்முட்டி, ஜெகதி ஸ்ரீகுமாரன், பாலச்சந்திர மேனன், ஸ்ரீனிவாசன், சத்யன் அந்திகாட், பிரியதர்ஷன், வேணு நாகவள்ளி என மாலிவுட்டின் பிரபலங்கள் அனைவரும் புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தம்பதியருக்கு பிரணவ் மோகன்லால் மற்றும் விஸ்மயா மோகன்லால் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதுதான் மாலிவுட் சூப்பர்ஸ்டார் மோகன்லால் தமிழ்நாட்டு மாப்பிளை ஆன கதை !

ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்

Leave a Reply