• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகாவித்தியன்ஸ் தினத்தினை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பயணம்

இலங்கை

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ‘மகாவித்தியன்ஸ்` தினத்தையும் நடைபயணத்தினையும்  நாடுபூராகவும் அறிவிக்கும் முகமாக பாடசாலையின் பழைய மாணவரொருவர்  இலங்கையைச்  சுற்றி மோட்டார் சைக்கிள் பயணமொன்றை  மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாவித்தியன்ஸ் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை நாடுபூராகவும் அறிவிக்கும் முகமாக பாடசாலையின் பழைய மாணவனான ம. இமயவன் இலங்கையை சுற்றி சுமார் 1466 கிலோ மீற்றர் தூரத்தினை 40 மணி நேரத்தில் சுற்றி வரவுள்ளார்.

இம் மாதம் 10 ஆம் திகதி காலை 5.30 மணிக்கு பாடசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கும் மோட்டர் சைக்கிள் சுற்றுப்பயணம் 12 ஆம் திகதி நடை பயணம் ஆரம்பமாகும் நேரத்தில் மீண்டும் பாடசாலை முன்றலில் முடிவடையவுள்ளது.

குறித்த சுற்றுப்பயணத்திற்கு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 2006 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு பழைய மாணவர்களும் பாடசாலை பழைய மாணவர் சங்கமும் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply