• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள்தொகையில் வீழ்ச்சி கண்ட ஜப்பான்

அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான ஜப்பான், தொடர்ந்து 14 வது ஆண்டாக அதன் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2021-ல் 125.68 மில்லியனிலிருந்து ஜனவரி 1, 2023க்குள் 122.42 மில்லியனாகக் குறைந்துள்ளது. அதே சமயம் ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது.
  
ஜப்பானில் மூன்று மில்லியன் வெளிநாட்டினர் இருப்பதாக சமீபத்திய மதிப்பீடு காட்டுகிறது. அதேபோல், ஜப்பானிய சமுதாயத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2008-ஆம் ஆண்டு முதல் ஜப்பானின் மக்கள்தொகை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது, ஆனால் அனைத்து மாகாணங்களின் (மாவட்டங்கள்) மக்கள்தொகை குறைவது இதுவே முதல் முறை.

இந்த ஆண்டு மக்கள் தொகை எட்டு லட்சம் குறைந்துள்ளது. இது தவிர வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை விட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

நாட்டின் தலைநகரான டோக்கியோவில்தான் அதிக வெளிநாட்டினர் உள்ளனர். வெளிநாட்டினர் நகரத்தில் 4.2 சதவீதம் உள்ளனர்.

அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை பூர்த்தி செய்ய, டோக்கியோவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு, 2040-க்குள் வெளிநாட்டு தொழிலாளர்கள் நான்கு மடங்காக வேண்டும் என்று மதிப்பிட்டுள்ளது. ஜனவரி 1, 2020 நிலவரப்படி, ஜப்பானில் 2.87 மில்லியன் வெளிநாட்டினர் உள்ளனர். 

Leave a Reply