• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஊர்வசி சாரதா

சினிமா

ஒரு நடிகரோ நடிகையையோ பல வருடங்கள் திரைப்படங்களில் நடித்து அதில் தேசிய விருது பெறுவது என்பது அரிதாக ஒரு முறை நடைபெற்றாலே அவர் தன் வாழ்நாள் முழுவதும் அதை சொல்லிக் கொண்டிருப்பார் அந்த வகையில் அது ஒரு சிறப்பான மைல் கல்லாக அவர்கள் கருதக்கூடியது 
ஆனால் ஒரு நடிகை ஒரு எட்டு வருடங்களுக்குள் மூன்று முறை வெவ்வேறு மொழிகளில் தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப்பட கூடிய ஒன்றுதானே ?
இது மட்டுமல்ல இது போன்ற பல ஆச்சரியமான தகவல்களுக்கு சொந்தக்காரர் நடிகை சாரதா 
இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலி என்ற நகரில் பிறந்தவர் இவருடைய தந்தை வெங்கடேஸ்வர ராவ் தாயார் சத்தியவதி இருவரும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இவரது இயற்பெயர் சரஸ்வதி தேவி
கலைக்கு தொடர்பில்லாத ஒரு குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் கூட இவர் சிறு வயதில் தன்னுடைய பாட்டி வீட்டில் வளர்வதற்காக அனுப்பப்படுகிறார் பாட்டி மிகவும் கண்டிப்பு ஆனால் கட்டுப்பட்டியாக வளர்ந்த அவர் தன் தாயின் விருப்பமான பரதத்தை கற்றுக் கொள்கிறார் அதன் பிறகு மேடை நாடகங்களில் தோன்றி நடித்து வருகிறார்
 பிறகு 1968 ல் நாகேஸ்வரராருடன் இட்டார் மித்ருலு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் அன்று தொடங்கி அவருடைய கலைப்பயணம் கடந்த 2017ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது
 இதில் ஒரு சுவாரசியமான மற்றும் நம்ப முடியாத தகவல் என்னவென்றால் இவர் 1968 இலிருந்து 90 வரை ஒவ்வொரு வருடமும் 10 படங்களுக்கு குறையாமல் நடித்திருக்கிறார்
 இதிலும்  1966இல் 16 படங்களிலும் அதேபோல 1983ல் 16 படங்களும் ஒரே வருடத்தில் நடத்தியுள்ளார் அது மட்டுமல்ல இதுபோல 14, 13 ,12 ,11 என்று ஒவ்வொரு வருடத்திலும்  நடித்திருக்கிறார் என்பது சிறப்பு
 இவை அனைத்துமே தெலுங்கு படங்கள் அது மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் வட இந்திய மொழியான இந்தியிலும் நடித்திருக்கிறார் என்பது சிறப்பு
 இதெல்லாம் விட பெரிதுஇவர் மூன்று முறை தேசிய விருதுகள் பெற்று இருக்கிறார். அதில் முதல் முறையாக துலாபாரம் என்ற தமிழ் படத்தில் நடித்ததற்கான தேசிய விருதும் இரண்டாவது விருது சுயம்வரம் என்ற மலையாள படத்தில் நடித்ததற்கும் மூன்றாவது விருது நிமஜ்ஜனம் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காகவும் கிடைத்துள்ளது
அப்போது ஊர்வசி விருது என்று அழைக்கப்பட்டதால் இவர் பெயருடன் ஊர்வசி என்றது பட்டமும் சேர்ந்து கொண்டது 
இதுபோல ஒரு வருடத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் மூன்று முறை தேசிய விருது 5 மொழிகளில் நடித்தது போன்ற அனைத்து சாதனைகளும் ஒருவர் செய்திருக்கிறாரா அல்லது தனித்தனியாவது செய்திருக்கிறாரா என்பது தெரியவில்லை 
அது மட்டுமல்ல இரண்டு முறை பிலிம் பேர் விருதுகளும் (தென்னிந்திய அளவில் கொடுப்பது) இரண்டு முறை ஆந்திராவில் என் டி ஆர் விருதும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் மலையாளத்தில் திரிவேணி மற்றும் தாரா விருதும் கன்னடத்தில் நந்தி விருது ஹிந்தியில் பி எஃப் ஜெஏ விருது என எல்லா வருடங்களிலும் இவர் விருது பட்டியலும் நீள்கிறது

 உண்மையில் இவர் பல படங்கள் நடித்தாலும் தமிழில் பெரும்பாலும் சோகப் படங்களிலேயே இவர் வருவார் அதுவும் இவர் தேசிய விருது பெற்ற துலாபாரம் படமானது தற்காலத்தில் மீண்டும் எடுக்கப்பட்டால் நிச்சயம் வரவேற்பு இருக்காது என்ற அளவிற்கு அதில் அவ்வளவு  சோக காட்சிகள் வரும் அந்த ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய உயிரை கொடுத்து நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருப்பார் அதனால் தான் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை வீடியோவில் பார்த்தால் உங்களுக்கு புரியும் 
ஒரு குடும்பத்தின் சுமையை எப்படி தாங்குகிறார் என்பதில் பல பெண்களை சாரதாவிற்கு ஒப்புமைப்படுத்தி  தான் பேசுவார்கள் அந்த அளவிற்கு அவர் அந்த காலத்தில் சோக வேடங்களுக்கு மிகவும் புகழ் பெற்றவர்
 தமிழில் வெகு சில படங்களை செய்திருந்தாலும் அந்த அத்தனை படத்திலும் இவருடைய கதாபாத்திரம் பேசப்படுவதாக இருக்கும்
 தெலுங்கில் கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்து இருக்கிறார் அதற்கு அடுத்ததாக மலையாளத்தில் அதிக படங்களும் கன்னடம் தமிழில் குறைந்த அளவிலும் நடித்துள்ளார் ஹிந்திலும் கணிசமான படங்கள் நடித்துள்ளார் என்பது இவருடைய சிறப்பு 
இது மட்டுமல்ல இவர் ஒரு அரசியல்வாதியும் கூட ஆம் இவருடைய சொந்த தொகுதியான தெனாலியில் தெலுகு தேசம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்
 இவருடைய கணவரும் நடிகர் தான் சலம் என்ற அவரை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே பிரிந்து விட்டார் தற்போது அவர் மறைந்தும் விட்டார் 
இவர் லோடஸ் சாக்லேட் என்ற சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது தகவல்
 தற்போது 78 வயது ஆன நிலையிலும் இன்னும் ஆரோக்கியத்துடன் சகோதரர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் 
நீண்ட காலம் வாழட்டும்.

 

Vedanthadesikan Mani Lion

Leave a Reply