• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ் நாவலுக்காக இலக்கிய விருது 

சினிமா

அவுஸ்திரேலியாவில் ஈழத் தமிழரான சங்கரி சந்திரன் தனது 'சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்” நாவலுக்காக 60,000 டொலர் மதிப்புள்ள மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றுள்ளார். 
ஈழத்தமிழ் பின்னணிகொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் எழுதிய "Chai Time at Cinnamon Gardens" நாவல் ஆஸ்திரேலியாவின் இலக்கியத்துக்கான Miles Franklin அதி உயர் விருதினை வென்றிருக்கிறது. சிட்னியில் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சங்கரி எழுதிய மூன்றாவது நாவல் இதுவாகும். Miles Franklin விருதுக்குழுவின் சார்பில் சங்கரியை அழைத்து இந்த வெற்றிச் செய்தியை அறிவித்தபோது, நான்கு தடவைகள் திரும்பத் திரும்பக் கூறிய பின்னரே, சங்கரி தனது வெற்றியை உணர்ந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. Miles Franklin விருதினை வெற்றிகொண்டுள்ள சங்கரிக்கு 60 ஆயிரம் டொலர் பணப்பொதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply