• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடர்பில் உதவ முன்வந்துள்ள நாடு

உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு லிதுவேனியா உதவ முன்வந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு உக்ரைனிய தானியம் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மோசமடைந்துள்ள போர் சூழ்நிலைகளால் ரஷ்யா, உக்ரைன், துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் இணைந்து போடப்பட்ட தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா மறுப்பு தெரிவித்து வெளியேறிவிட்டது.
  
இதனால் உக்ரைனிய தானியங்களை வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்வது தடைப்பட்டுள்ளது, நிறைய நாடுகள் உக்ரைனிய தானியங்களை நம்பி இருக்கும் போது தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி இருப்பது உலக அளவில் உணவு பொருட்களின் தட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்து தானியங்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த செயல் உலக உள்ள பல மக்களை பசிக்குள் தள்ளிவிடும் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்ய பால்டிக் துறைமுகங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு லுதுவேனியா(Lithuania) தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஆணையமும் உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்ய இந்த விருப்பத்தை பயன்படுத்தி கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே உக்ரைனிய தானியங்களை நம்பி இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவையான தானியங்களை இலவசமாக வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply