• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவின் கண்டிப்பான தலைமை ஆசிரியையின் பாடசாலை முதலிடத்திற்கு தெரிவு

பிரித்தானியாவின் கண்டிப்பான தலைமையாசிரியர் நடத்தும் வடக்கு லண்டன் பாடசாலை ஒன்று மீண்டும் Ofsted அமைப்பால் முதலிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு லண்டனின் வெம்ப்லி பகுதியில் அமைந்துள்ளது Michaela Community பாடசாலை. இந்த பாடசாலையானது ஒழுக்கத்திற்கு சமரசமற்ற அணுகுமுறைக்கு என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
  
தற்போது சிறப்பாக செயல்படும் பாடசாலை என தொடர்ந்து இரண்டாவது முறையாக தெரிவாகியுள்ளது. ஆய்வை முன்னெடுத்த அதிகாரிகள் தரப்பு பாராட்டியுள்ளதுடன், மாணவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது அங்குள்ள மாணவர்கள் ஆசிரியர்களின் சவால்களை எதிர்கொண்டு தங்கள் கல்வியை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என குறிப்பிடுகின்றனர்.

மேலும், அங்குள்ள பாடத்திட்டமானது மாணவர்களை அவர்களின் கல்வியின் அடுத்த படிகளுக்கு விதிவிலக்கின்றி சிறப்பாக தயார்படுத்துகிறது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இங்குள்ள தலைமையாசிரியர், இந்திய வம்சாவளி கேத்தரின் பீர்பால்சிங் பிரித்தானியாவின் மிகவும் கண்டிப்பான தலைமை ஆசிரியர் என விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply