• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விம்பிள்டன் இறுதி 2023

விளையாட்டு

டென்னிஸ் ரசிகர்களுக்கு முழு விருந்து ரொம்ப நாள் கழித்து பரிமாறப் பட்டது நேற்றுதான். ஃபெடரர் , ஜோக்கோவி , நடால் , மர்ரே என்ற நான்கே ஆளுமைகளை சுற்றி சுற்றி கிட்டத் தட்ட 20 வருடங்கள் சுழன்றது.அதுவும் முதல் செட் ஜோக்கோவி ஜெயித்த பிறகு மற்றவருக்கு ஆட்டத்தை ஜெயிக்கும் வாய்ப்பை தந்ததே இல்லை.

5 மணிநேர ஐந்தாட்ட அதிசயம். சில செட் உள் ஆட்டங்கள்  30 நிமிடம் நீண்டன. ஜோக்கோவியின் அனுபவமா அல்காரஸ்ஸின் இளமை கலந்த புதுமையா என்று கடைசி வரை யூகிப்பது கஷ்டம்.

இருவருமே சளைக்காமல் ஆடினார்கள் என்றாலே. ஜோக்கோவிக்கு விம்பிள்டன் புல்தரை மீனுக்கு தண்ணீர் போல. அல்காரஸ்  20 வயதில் 1 ஆவது ஏ.டி.பி   மதிப்பீடு பெற்ற முதல் இளைஞரானாலும் அவர் களிமண் பூமியில் ஆடும் தேர்ச்சி விம்பிள்டன் புல்லில் வருமா என்று ஜோக்கோவிக்கே சந்தேகம் இருந்தது.

இனி சந்தேகமே வேண்டாம்.‌டென்னிஸ் உலகம் அல்காரஸ் , ஸின்னர்,மெட்வெடேவ் , யூபாங்க்ஸ் போன்றோர் கையில்தான். 

இன்று அல்காரஸ் வழக்கத்தை விட சிறப்பாக சர்விஸ் போட்டதுடன் தடுப்பாட்டம் , தாக்குதல் ஆட்டம் இரண்டையும் பிரமாதமாக கலந்து மைதானம் எல்லை முதல் வலை வரை இடம் வலம் என்று வியாபித்தார்.

முக்கியமாக வாலி ( volley) , ட்ராப் ( drop), லாப்( lob), நேர்க்கை  , புறங்கை ஆட்டங்கள் , எதிர்மூலை , நேர் மூலை , கடைசி நேர இடமாற்ற ( placement)ஆட்டம் என்று அதிக டாப் ஸ்பின்(Top spin) , தேவையான ஸ்லைஸஸ் ( slices)என்று கலக்கினார்.

இளமை மட்டுமல்ல , திறமையும் வென்று டென்னிஸில் புது வாசல் திறந்து , புதுக்காற்று நுழைந்தது.

அப்படியே மூச்சு விட மறந்து சீட்டின் நுனியில் இருந்து திரில்லர் பார்த்த அதிசய அனுபவம்.

Gopalakrishnan Sundararaman

Leave a Reply