• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள்

சினிமா

என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள் என்றும் , என்றென்றும் , எப்பொழுதும் ,எதிலும் .....
சுஜாதா ...
என்ன மாதிரி மனிதர் இவர் ? எப்படி இவருக்கு மட்டும் எதுவும் சாத்தியமானது ? முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை இவர் எழுத்துக்கள் வசீகரம் இழக்காமலே இருந்தது ? 
இவர் எப்போது இத்தனை விஷயங்களையும் படித்தார் ? எப்படி எழுதிக்கொண்டே இருக்க முடிந்தது ? சினிமா , நாடகம் , அறிவியல் , ஆன்மிகம் , கவிதை , எல்லாவறீலும் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்திக்
 கொள்ள முடிந்தது ?  இவருக்கும் அதே இருபத்து நான்கு மணி கொண்ட நாள்தானே.? ஆச்சரியப்பாடுவதைத் தவிர வேறு என்ன 
செய்ய முடியும் ?
பலரும் இவர் எழுத்துக்களைப் பாராட்டியிருக்கின்றார்கள்.
வியந்து இருக்கின்றார்கள். இவரைப் பின் பற்றி எழுத முயற்சித்து இருக்கின்றார்கள் . 
இருக்கட்டும் .
 அவரைப்பற்றி,  அவர் எழுத்துகளைப் பற்றி.
.அவர் என்ன சொல்கின்றார் ?  
"என் எழுத்து என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்று இருக்கின்றது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கின்றது. பிரைவேட் ஜெட்டிலிருந்து ப்ரீமாண்ட் மிஷன்பீக் மலைஉச்சி மாளிகை வரை அனுமதித்து இருக்கின்றது.  
பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டு  பாராட்டி இருக்கின்றார்கள்.
மனைவிமார்கள் அழுதிருக்கின்றார்கள்.
கணவன்கள் மனைவி மீது சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்து இருக்கின்றார்கள். 

ரோஜா வெளிவந்த சமயத்தில் பெங்களூருக்கு தனியாக ஓடி வந்த இளம் பெண் அதிகாலையில் ஜலஹள்ளியில் அரவிந்தசாமியுடன் என்னை மணமுடி என்று கதவத் தட்டியிருக்கிறாள்.
" ஆ” கதையை படித்துவிட்டு என் மகளை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று திருநெல்வேலியில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும் , 
“ பாலம் “ கதையைப் படித்துவிட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசகியும் , என் வாசகர்கள்தான்.
வாழ்க்கையின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் , முதுகுவலியிலிருந்து முண்டோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்.கேட்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த நண்பர்களையும் , அற்புத கணங்களையு என் எழுத்தால் பெற்றிருக்கின்றேன். 
அதுதான் என்னுடய நோபெல்..!
நான் குத்துப் பட்டுத்தான் வலியை எழுத வேண்டும் என்பதில்லை. என் மற்ற வலிகளை ஞாபகப் படுத்திக் கொண்டு இடம் பெயர்ந்து எழுதலாம். அது என் சாமர்த்தியம். Entering the skin of each character என்பார்கள்.  அது எனக்குப் பிடித்த விஷயம்.அதனால் சில நிறைவேறாத ஆசைகள் எழுத்து மூலம் நிறைவேறுவது வேறு விஷயம்.
"வாழ்க்கையில் பார்த்த சம்பவங்களை ஒரு விதமாக கலக்கித்தான் கதைகள் எழுதுகின்றோம்.இதனால் வாழ்க்கை வினோதங்கலிருந்து  எழுத்து தப்பவே முடியாது. வாழ்க்கை என்று சொல்வது மனித வாழ்க்கை. என் வாழ்க்கையாக அது இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை
நான் ஆதாரமாக கதைகள் நாவல்கள் எழுதுபவன். என்னைப் பலமுறை பல காரணங்களுக்பங்கு திரைக் கதை எழுத அழைப்பார்கள். கதை பிடித்து இருந்தால்தான் அவற்றை எடுத்துக்
 கொள்வேன்.  கதை பிடித்திருந்தது என்பதற்கு எனக்கு சில விதிகள் எனக்கு உள்ளன.
முதலாவதாக கதைக்கு ஒரு ப்ரிமைஸ் இருக்க வேண்டும்.  அதன் சாரத்தை ஒரு வரியில் சொல்வதற்கு இயல வேண்டும். ப்ரிமைஸ் என்பது கதையை ஒரு வரியில் சொல்லவேண்டும். இதை what if என்பார்கள். எல்லா நல்ல படங்களுகும் ப்ரிமிஸ் உண்டு. 
இந்த ப்ரிமைஸ் என்பது நன்றாக எழுதப்பட்ட நாவ்ல்களுக்குக் கூட உண்டு உதாரணம். பொன்னியின் செல்வன்.
சில உதாரணங்கள்.
பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஐந்து பையன்கள் வீட்டை விட்டு சென்றால் என்னவாகும் ? ( பாய்ஸ் )
ஒரு சாதாரண டி.வி ரிப்போர்டருக்கு ஒரு நாள் மட்டும் முதல்வராகும் வாய்ப்பு வந்தால் என்னவாகும்  ( முதல்வன் ).....
இப்படி யோசித்தால் எல்லா வெற்றிப் படங்களிலும் இந்த என்னவாகும் என்ற கேள்வி இருக்கும். இருக்க வேண்டும். இதை நம் சினிமா பரி பாஷையில் நாட் அல்லது தாட் என்கின்றார்கள். ஹாலிவுட்டில் ப்ரிமைஸ் என்கின்றார்கள்.
நான் ஏன் ஆங்கிலத்தில் நாவல் எழுதவில்லை. ?
இங்லீஷில் எழுதறதுக்கு creative words என்று சொல்வாங்க. ரொம்ப புலமை வேணும். எழுதலாம். ஆனா.. நாவல் எழுதற அளவுக்கு போதாது.
என் மன நிலையில் ஏற்படும் மாற்றங்க்ளைப் பொருத்து என் பார்வை மாறுபடுகிறது. 
மெரினாவில் ஷார்ட்ஸ் ஸ்வீகரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமை படுவேன்.இப்போது புன்னகைக்கின்றேன். பொதுவாகவே பொறாமைப்படுவதற்கான விஷயங்களும் அதட்டிச் சொல்வதற்கான விஷயங்கள் குறைந்து வருகின்றன.
வயதும் அதில் ஒரு பங்கு வகிக்கின்றது.
எழுபதாவது வயதில் 
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.....
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்..முதலிடத்தில் உடல் நலம், மன நலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்ப து, தெரிந்தோ தெரியா மலோ யார் மனதையும் புண்படு த்தா மல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச் சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது.லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
ஹிண்டுவில் அபிட்ச்சுவரி பார்க்கையில் இறந்தவர்கள் என்னைவிட பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால்  பரவாயில்லை நாம் தப்பிச்சோம் என்றும் பெரியவராக இருந்தால் கழித்துப் பார்த்த்து பரவாயில்லை இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்று எண்ணுவேன். எதிர்காலம் என்பது இப்போதெல்லாம் வருஷக்கணக்கில் நினைத்துப் பார்பதில்லை. மாதக்கணக்கில் , ...ஏன் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக்கணக்கில் நாள் கணக்கில் அந்த நாட்களை வாழத் தோன்றுகின்றது. Today I am alright. Thank God! 
சயின்ஸ் அதிகம் படிப்பதால் கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னது போல  சிலர் கடவுள் இருக்கின்றார் என்கின்றார்கள். பிறர் கடவுள் இல்லை என்கின்றார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையே எங்கோ இருக்கின்றது."
இப்படி எல்லாம் எல்லா விஷயங்களையும் பார்க்கவும் , சிந்திக்கவும் , எழுதவும் முடிந்த சுஜாதா ...
Immortality பற்றி ஒரு விஸ்தாரமன கட்டுரை சமயம் கிடைக்கும் போது எழுதுகிறேன் என்று ஒரு கட்டுரையில் எழுதினார்.
ஆனால் சமயம் அமைவதற்குள் அவர் .....
 இறந்துவிட்டார் என்று ஒப்புக் கொள்ள மனம் வரவில்லை என்பதால் அப்படி சொல்லி முடிக்கவில்லை.
சாரதி.
13/07/2023.

 

Leave a Reply