• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையக மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்- சஜித்

இலங்கை

மலையக மக்களை சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை தனது ஆட்சியில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” தேசிய கடன் மறுசீரமைப்பினால், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது உண்மையில் வெட்கத்துக்குரிய செயற்பாடாகும்.

தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளால் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள்கூட, அம்மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தேசிய கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தார்கள்.

மலையக மக்களின் தலைவர்கள் என கூறிக்கொள்ளும் இந்தத்தரப்பினர், அம்மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்களா என்பதை எதிர்க்காலத்திலேனும் மலையக மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதியத்தை கொள்ளையடித்த இந்த துரோகிகளுக்கு, மலைய மக்கள் வாக்குகளால் தகுந்த பதில் கொடுக்க வேண்டும்.

மலையக மக்களது குடியுரிமையை ரணசிங்க பிரேமதாஸ உறுதிப்படுத்தியதைப் போன்று, அம்மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக நான் மாற்றுவேன் என்பதை இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன். ”என்றார்
 

Leave a Reply